Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிஎம் தேவேந்திர பட்னாவிஸை விட அதிக வருமானம்.. மகாராஷ்டிராவின் டாக் ஆஃப் தி டவுனாக மாறிய அம்ருதா

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவியேற்க உள்ளார். இதன்மூலம் அங்கு நிலவி வந்த அரசியல் இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா குறித்த தகவல்கள் பேசு பொருளாகியுள்ளன. கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் அம்ருதா தான் மகாராஷ்டிராவில் டாக் ஆஃப் தி டவுனாக உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டாலும், முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் கூட்டணிக்குள் மாறுபட்ட கருத்து நிலவி வந்தது. இதனால் ஆட்சியமைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் மும்பையில் பாஜக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக சட்டமன்ற குழுத்தலைவராக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் மகாராஷ்டிரா அரசியலில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரினர். நாளை மாலை தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்க உள்ளார். அவர் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ் குறித்த தகவல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேர்தல் பிரச்சாரம் தொடங்கி சமூகவலைதள பிரச்சாரம் வரை பெரும்பாலான நேரங்களில் அவர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு பக்க பலமாக இருந்துள்ளார். அம்ருதா பட்னாவிஸ் பாடகர், வங்கி உயரதிகாரி, நடிகர், சமூக ஆர்வலர் என்று பல முகம் கொண்டவர். பிரபல அரசியல் கட்சி தலைவரின் மனைவி என்பதை கடந்து, தனது திறமையால் அந்த மாநிலத்தில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியவர்.

அம்ருதா 1979 ஆம் ஆண்டு நாக்பூரில் பிறந்தார். அம்ருதா தந்தை ஷரத் ரனதே கண் மருத்துவர். தாய் சாருலதா ரனதே மகப்பேறு மருத்துவர். அம்ருதா இளங்கலை வணிகம் பொருளாதாரமும், முதுகலை எம்பிஏ (நிதி) படித்தவர். படிப்பு முடித்து ஆக்சிஸ் வங்கியில் கேஷியராக சேர்ந்தவர், பிறகு அதே ஆக்சிஸ் வங்கியின் துணைத் தலைவரானார்.

இசையிலும் அதீத ஆர்வம் கொண்டவர். பல பாடல்களை பாடியுள்ளார். மும்பை ரிவர் ஆன்தம், கொரோன வாரியர்ஸ், அமிதாப் பச்சனுடன் இணைந்து பாடிய ஆல்பம் நல்ல வரவேற்பை பெற்றன. இளம் வயதில் இருந்து விளையாட்டிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். மாநில அளவிலான டென்னிஸில் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டுள்ளார்.

ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களில் அம்ருதாவின் களப்பணி மாநிலம் முழுவதும் கவனிக்க வைத்தது. தேர்தலை ஒட்டி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவர் தன் கணவர் தேவேந்திர பட்னாவிஸை விட அதிகம் சம்பாதிப்பதாக தெரியவந்துள்ளது. 2019 - 2024 ஆண்டில் தேவேந்திர பட்னாவிஸ் ரூ.1 கோடி வருமானம் காட்டியுள்ளார். இதே காலகட்டத்தில் அம்ருதா ரூ.5 கோடி வருமானம் காட்டியுள்ளார்.

devendra fadnavis amruta fadnavis

சமூகவலைதளங்களும் அம்ருதா பிரபலமாக உள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை 1.1 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். சமூக கருத்துகள், விழிப்புணர்வு தொடர்பாக அவர் வெளியிடும் கருத்துக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+