ஹனிமூன் சென்ற ஆனந்த் அம்பானி – ராதிகா தம்பதி.. ரிசார்ட்டின் ஒருநாள் வாடகை எம்புட்டு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

மும்பை: திருமணத்துக்கு ரூ. 5,000 கோடியில் பிரமாண்டம் காட்டிய அம்பானி குடும்பம், ஹனிமூனிலும் ஆச்சரியப்பட வைத்துள்ளனர். ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் தம்பதி தங்கள் ஹனிமூனுக்காக கோஸ்டா ரிகா நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தங்கியுள்ள சொகுசு ரிசார்ட்டின் ஒருநாள் வாடகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி – நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. கடந்த மாதம் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்டுக்கும் நடந்த திருமணத்தை கண்டு உலகமே வியந்தது. சுமார் ரூ.5,000 கோடி மதிப்பில் நடந்த அந்தத் திருமணம் தான், உலகத்திலேயே அதிக செலவில் செய்யப்பட்ட திருமணம். ரஜினிகாந்த், அமிதாபச்சன், ஷாருக்கான், சச்சின், தோனி உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் தொடங்கி பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க், இவன்கா டிரம்ப், ஜான் சீனா, ஜஸ்டின் பீபர் வரையிலான வெளிநாட்டு பிரபலங்கள் வரவழைத்து பிரமாண்டம் காட்டினார்கள்.

Costa Rica honeymoon

“ரூ.5,000 கோடியில் திருமணமா” என்று அதிர்ச்சியானவர்களுக்கு, “அது எல்லாம் சும்மா. அம்பானியின் சொத்து மதிப்பில் இது 0.5 சதவீதம் தான்.” என்ற தகவலை சொல்லி மேலும் அதிர்ச்சியில் உறைய வைத்தனர். திருமணம் முடிந்த கையுடன் மொத்த அம்பானி குடும்பமும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். அது போன வாரம். இந்த வாரம் புதிய கன்டென்டுடன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் தம்பதி மீண்டும் டிரெண்டிங் ஆகி வருகின்றனர்.

திருமணத்தை ஒட்டியே ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தி களைகட்டிய அம்பானி, ஹனிமூனிலும் ஏதாவது வித்தியாசமான திட்டம் வைத்திருப்பார்கள் என்று ஆனந்த் – ராதிகா ஹனிமூன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் கோஸ்டா ரிகா நாட்டில் ஹனிமூனை கொண்டாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஆனந்த், ராதிகா இருவரும் கடந்த 1ஆம் தேதி கோஸ்டா ரிகா நாட்டுக்கு சென்றுள்ளதாக அங்குள்ள இமிக்ரேசன் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த வைரல் தம்பதி அங்குள்ள 'Casa Las Olas’ என்கிற சொகுசு ரிசார்ட்டில் தங்கியுள்ளார்களாம். திரும்பிய பக்கமெல்லாம் அழகியல், பிரமாண்டம் என அந்தப் பகுதி வேற லெவலில் இருக்குமாம். இந்த ரிசார்ட்டில் ஒரு இரவு தங்க 30,000 அமெரிக்க டாலர் கட்டணம். அதாவது இந்திய மதிப்பின் படி ஒரு நாள் இரவு அங்கு தங்குவதற்கு சராசரியாக ரூ. 25 லட்சம் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். அங்கு நான்கு நாட்கள் தங்கினால் கூட ரூ.1 கோடி செலவாகிவிடும். “ரூ.25 லட்சத்துக்கு அந்த ரிசார்ட்டில் அப்படி என்னதான்யா இருக்கு?” என்று நெட்டிசன்கள் அந்த ரிசார்ட் குறித்து இன்டர்நெட்டில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+