ஷ்ஷ்ஷ்.. அதை கேட்காதீங்க.. என்னைய வேலையை விட்டே தூக்கிடுவாங்க.. ஆனந்த் மகிந்திராவின் காமெடி பதில்
மும்பை: ட்விட்டரில் பாலோயர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஐயோ இதற்கு நான் பதில் சொன்னால், என்னை திட்டுவார்கள் என நகைச்சுவையாக ஆனந்த் மகிந்திரா பதில் அளித்துள்ளார்.
மகிந்திரா குழுமத்தின் தலைவராக உள்ளவர் ஆனந்த் மகிந்திரா, இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவ்வப்போது புதிய படைப்பாளிகளையும் திறமைசாலிகளையும் உலகிற்கு அடையாளம் காட்டி வருகிறார்.
அது போல் நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கிறார். நெட்டிசன்கள் பதிவிடும் விஷயங்களில் தன்னை ஈர்க்கும் விஷயங்களை ரீட்வீட் செய்து பாராட்டவும் செய்கிறார்.

ஸ்கார்பியோ லாஞ்ச்
இந்த நிலையில் ஸ்கார்பியோ கார் எப்போது லாஞ்ச் செய்வீர்கள் என்ற கேள்விக்கு ஆனந்த் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். "சார் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். ஸ்கார்பியோ கார் எப்போது விற்பனைக்கு வரும் என நெட்டிசன் ஒருவர் ஆனந்த் மகிந்திராவிடம் கேட்கிறார்.

நகைச்சுவை
அதற்கு ஆனந்த் மகிந்திரா, ஷ்ஷ்ஷ்.. அதை மட்டும் சொன்னால் என்னை திட்டுவார்கள், வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள். உங்களை போல் நானும் ஸ்கார்பியோவுக்காக காத்திருக்கிறேன். இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும் என நகைச்சுவையாக சொல்கிறார் ஆனந்த் மகிந்திரா.

செம காமெடி
இதற்கு இன்னொரு நெட்டிசன் ஒருவர் சார் நீங்கள் போட்ட ட்வீட் செம காமெடியாக உள்ளது. சிறந்த நகைச்சுவை ட்வீட் என பாராட்டியுள்ளார். தன்னை வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள் என ஆனந்த் கூறியிருப்பதை சுட்டிக் காட்டிய நெட்டிசன் ஒருவர் சார், மகிந்திராவின் ராஜா நீங்கள். ஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும் வாழ்கிறீர்கள். உங்களை யார் சார் வேலையை விட்டு தூக்குவார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்களை நீங்களே
இன்னொருவர் சார் இந்த நிறுவனத்தையே அடித்தளத்திலிருந்து கட்டமைத்த நபரை யாராவது வேலையை விட்டு தூக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். உங்களை நீங்களே வேலையை விட்டு தூக்கி கொண்டால்தான் உண்டு, உங்களை யார் வேலையை விட்டு தூக்குவார்கள் என்கிறார் இன்னொரு நெட்டிசன். இப்படியாக ஆனந்த் மகிந்திராவுக்கு ஆதரவாக இத்தனை பேர் இருக்கிறார்களா?
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications