உடம்பு புல்லா ஸ்டியரிங் இருக்கும் போலயே.. இவர் ஒரு மனித Segway!ஆனந்த் மகிந்திரா போட்ட சூப்பர் ட்வீட்
மும்பை: தலையில் துணி மூட்டையை பிடித்துக் கொண்டு சரியான பேலன்ஸுடன் சைக்கிள் ஓட்டும் இளைஞரை ஆனந்த் மகிந்திரா பாராட்டியுள்ளார்.
Recommended Video
பெரும்பாலான இடங்களில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதால் வாகனங்களை ஓட்டுவது என்பதே சவாலான காரியமாக உள்ளது. அதையெல்லாம் தாண்டி சாகசங்களை செய்வதெல்லாம் யோசிக்க வேண்டிய விஷயமாகத்தான் இருக்கிறது.
சைக்கிள், இரு சக்கர வாகனம், ஸ்கேட்டிங் வீல்ஸ், பேலன்ஸிங் வீல் என எதை இயக்கினாலும் பேலன்ஸ் செய்வது முக்கியமானதாகும். அதிலும் பாடி பேலன்ஸிங்கை செய்ய வேண்டும்.

எந்த ஊர்
இந்த நிலையில் எந்த ஊர் என தெரியவில்லை. ஒருவர் தலையில் மிகப் பெரிய துணி மூட்டையை எடுத்துக் கொண்டு சைக்கிளில் அமருகிறார். இத்தனை பெரிய மூட்டையை வைத்துக் கொண்டு இவர் எப்படி சைக்கிளை ஓட்ட போகிறார் என நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஆனந்த் மகிந்திரா ட்வீட்
ஆம். அந்த மூட்டையில் தனது இரு கைகளையும் வைத்துக் கொண்டு பெடல் செய்கிறார். சரி! சாலையில் வளைவு பகுதி வருமே அப்போது அவர் என்ன செய்வார்? ஒன்று ஸ்லோவாக செல்ல வேண்டும், இல்லாவிட்டால் சைக்கிளில் மூட்டை வைத்து தள்ளிக் கொண்டு சிறிது தூரம் கழித்து ஏறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

உடலில் ஸ்டியரிங்
ஆனால் அவரோ வளைவுகளிலும் எத்தனை வேகமாக சைக்கிளை மிதித்துக் கொண்டு செல்கிறார். அதாவது அவரது மனம், உடல் எல்லாமே பேலன்ஸ் செய்ய தெரிந்த ஒருவரால் மட்டுமே இப்படி செய்ய முடியும். அது போல் எதிரே ஒரு பெண்ணும் சிறுமியும் வருகிறார்கள். ஆனாலும் அவர் தனது வேகத்தை குறைக்கவே இல்லை. இந்த வீடியோவை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா ட்வீட் போட்டுள்ளார்.

பயிற்சி கிடைப்பதில்லை
அந்த ட்வீட்டில் இவர் ஒரு மனித செக்வே (செக்வே என்றால் ஸ்டியரிங் இல்லாமல் செல்லக் கூடிய ஒரு வித மோட்டார் வாகனம்). இவரது உடலிலேயே ஸ்டியரிங் இருக்கும் போல!. அவருடைய பேலன்ஸிங் சென்ஸ் நம்ப முடியவில்லை. எனக்கு ஒரே வருத்தம் என்னவென்றால் இவரை போன்ற திறமைகளை கொண்ட நிறைய விளையாட்டு வீரர்கள், ஜிம்னாஸ்டிக் செய்பவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களது திறமைகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அவர்களுக்கு உரிய பயிற்சி கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications