அடேங்கப்பா! "2,500 வகை உணவுகள்.." அம்பானி வீட்டு திருமணத்தில்.. பங்கேற்ற பிரபலங்களுக்கு ராஜ விருந்து
மும்பை: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உலக பிரபலங்கள் முதல் இந்திய பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு ராஜ உணவு விருந்து அளிக்கப்பட்டுள்ளது.
உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும், நாடறிந்த தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை ஆனந்த் அம்பானி கவனித்து வருகிறார். இவருக்கும் மருந்தக துறையை சேர்ந்த பிரபல தொழில்அதிபர் வீரேன் - ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்க்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஆனந்த் அம்பானி திருமணம்: இதையடுத்து, இவர்களின் திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள், தொழில் அதிபர்கள், ஹாலிவுட் திரை நட்சரத்திரங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று மும்பை பிகேசியில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது. திருமணத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே மும்பைக்கு உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டனர். ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நேற்று இரவு கோலாகலமாக நடந்தது.
பங்கேற்ற பிரபலங்கள்: திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் பங்கேற்றார். கிரிக்கெட் வீரர் தோனி, மனைவி சாக்சி, மகள் ஜிவாவுடன் வந்து இருந்தார். டபிள்யூ டபிள்யூ ஈ வீரர் ஜான் சீனா, அமிதாப் பச்சன், அனில் கபூர், சஞ்சய்தத், வெங்கடேஷ், வருண் தவான், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, சாரா அலிகான், ஜான்வி கபூர், இயக்குனர் கரன் ஜோகர், அட்லீ, கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, ஸ்ரீகாந்த், நடிகை நயன் தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கலந்து கொண்டார்.
ராஜ விருந்து: இங்கிலாந்து முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேயர், போரிஸ் ஜான்சன், அமெரிக்காவை சேர்ந்த டி.வி. பிரபலம் கிம் கர்தாஷியன், ராப் பாடகி ரீமா உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர். உள்ளூர் பிரபலங்கள் முதல் சர்வதேச பிரபலங்கள் வரை பங்கேற்ற இந்த திருமண விழாவில் வந்து இருந்த விருந்தினர்களுக்கும் ராஜ விருந்து அளிக்கப்பட்டுள்ளது.
2,500 உணவுகள்: இந்திய பாரம்பரிய உணவு வகைகள் முதல் சர்வதேச அளவிலான உணவுகளும் இடம் பெற்று இருந்தன. 2,500 வகையான உணவு வகைகள் விருந்தில் பரிமாறப்பட்டுள்ளது. சாட் உணவு வகைகள், தேங்காயால் செய்யப்பட்ட 100 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டுள்ளன. இதில் வாரணாசியில் உள்ள Kaashi Chaat Bhandar' எனும் சிற்றுண்டி உணவகத்தில் இருந்து ஸ்பெஷலாக பனாரஸ், டிக்கி, டொமேடோ சாட், சன்னா கச்சோரி, பாலக் சாட் மற்றும் குல்பி உள்ளிட்ட உணவு வகைகளும் அம்பானி வீட்டு திருமணத்தில் விருந்தினர்களுக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.
கிரீமி ரப்ரி, லஸ்ஸி: முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியே இந்த கடையை தேர்வு செய்து சாட் உணவு வகைகளை தயாரிக்க ஆர்டர் கொடுத்திருந்தாராம். மெட்ராஸ் காபி, முட்டை ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் கேவியர் டிராமிசு, கிரீமி ரப்ரி, லஸ்ஸி போன்ற ஆடம்பரமான விருந்துகளும் பரிமாறப்பட்டுள்ளன.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications