"வாவ் செம வாட்ச்"! அசந்துபோன மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி.. விலையை கேட்டா தலையே சுத்தும்!
மும்பை: ஆனந்த் அம்பானி திருமணக் கொண்டாட்டத்தில் அவர் கையில் அணிந்திருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான வாட்சை பார்த்து மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி ஆச்சர்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் டாப் மோஸ்ட் பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத் தலைவருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இவர்களது திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளது. திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலம், ஜாம் நகரில் கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகின்றன.

இப்படி ஒரு திருமணம் உலகிலேயே நடந்திருக்காது எனும் அளவுக்கு பயங்கர விமரிசையாக ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வில் பாலிவுட் திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், இந்தியாவின் டாப் தொழிலதிபர்கள் கவுதம் அதானி, ஆனந்த் மஹிந்திரா என ஏராளமான பிரபலங்கள் குவிந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து மட்டுமல்லாது உலகின் முன்னணி தொழிலதிபரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க், அவரது மனைவி பிரிசில்லா சான், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மகள் இவான்கா டிரம்ப் உள்பட பிரபலங்களால் குஜராத்தின் ஜாம் நகர் நிரம்பி வழிகிறது. கடந்த 3 நாட்களாகவே ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் இணையேற்பு நிகழ்வுதான் இந்திய அளவில் ட்ரெண்டாக உள்ளது.
இந்த நிலையில், மணமகனான ஆனந்த் அம்பானி கட்டியிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை, ஃபேஸ்புக் மெட்டா சி.இ.ஓ மார்க் ஸக்கர்பெர்க், மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் ஆச்சர்யமாகப் பார்த்து வியந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆனந்த் அம்பானி கட்டியிருந்த வாட்சைப் பார்த்த பிரிசில்லா சான், அவரது கையை பிடித்து நன்றாகப் பார்த்து, "இந்த வாட்ச் செமயா இருக்கே.. வாவ்" என ஆச்சர்யத்துடன் கூற, அதற்கு மார்க் ஸக்கர்பெர்க், "ஆமா, நான் அதை ஏற்கனவே அவரிடம் சொல்லிவிட்டேன்" என்கிறார்.
Mark Zuckerberg & his wife Priscilla was surprised to see Anant Ambani's watch. Anant was seen carrying beautiful audemars piguet royal oak open worked skeleton worth INR 14 crore. 🤑#AnantRadhikaWedding | #AnantAmbani pic.twitter.com/DEql5XFWUA
— Radhika Chaudhary (@Radhika8057) March 3, 2024
மேலும் பேசிய மார்க் ஸக்கர்பெர்க், "எனக்கு பொதுவாக ரிஸ்ட் வாட்ச்சில் விருப்பமில்லை. ஆனால், ஆனந்த் அம்பானி அணிந்துள்ள வாட்ச் வசீகரிக்கிறது. எனக்கு வாட்ச் கட்ட பிடிக்காது. ஆனால், இது ரொம்பவே கூல்" எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவர்கள் மூவரும் அந்த வாட்சைப் பற்றி விவாதிக்கின்றனர்.
மார்க் ஸக்கர்பெர்க்கையும் அவரது மனைவியையும் ஆச்சர்யப்படுத்திய அனந்த் அம்பானி அணிந்துள்ள அந்த வாட்ச்சின் விலையைக் கேட்டால் நமக்கு தலையே சுற்றும். Patek Philippe Grand Complication Sky Moon Tourbillion மாடல் வாட்ச்சான இது இந்திய மதிப்பில் ரூபாய் 63 கோடி விலை கொண்டது எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications