ஆனந்த் அம்பானிக்கு மிக முக்கிய பொறுப்பு.. சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆத்தீ இவ்ளோவா?
மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ஆண்டுதோறும் அவருக்கு ரூ.10 முதல் 20 கோடி வரை சம்பளம் வழங்கப்படும்.
முகேஷ் அம்பானி - நீதா தம்பதியின் பிள்ளைகளான ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் ஆகியோர் 2023 ஆம் ஆண்டு முதல் எண்ணெய் தொடங்கி தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகக் குழுமத்தின் நிர்வாகம் சாரா இயக்குநர்களாக சேர்க்கப்பட்டனர்.

அம்பானி வாரிசுகள்
ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவின் பணிகளை மேற்கொள்கிறார். ஜூன் 2022 இல் அவர் ஜியோ இன்ஃபோகாம் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் ஐபிஎல் அணி மும்பை இந்தியன்ஸின் பணிகளையும் அவர் கவனித்து வருகிறார்.
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல், ஆடம்பர வணிகம் மற்றும் இ-காமர்ஸ் பிரிவின் தலைவராக உள்ளார். இளைய மகன் ஆனந்த் அம்பானி நிறுவனத்தின் எரிசக்தித் துறையை கவனித்து வருகிறார். ஆனந்த் அம்பானி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
ஆனந்த் அம்பானி
நிர்வாகம் சாராத இயக்குநர்களாக இருந்த போது, முகேஷ் அம்பானியின் வாரிசுகளான மூவருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், 2023-24 ஆம் நிதியாண்டில் ஒவ்வொருவருக்கும் ரூ.4 லட்சம் அமர்வு கட்டணமும் (sitting fee) மேலும் நிறுவனத்தின் லாபத்தில் கமிஷன் உள்பட தலா ரூ.97 லட்சமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஆனந்த் அம்பானி நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டு, பொறுப்புகளும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளன. எண்ணெய் வேதிப்பொருட்கள், புதிய எரிசக்தி, பாலியஸ்டர், வினைல் மற்றும் ஜிகா தொழிற்சாலைகள் போன்ற திட்டங்களின் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனந்த் சம்பளம்
இதன் காரணமாக ஆனந்த் அம்பானியின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அவர் இனி ஆண்டுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் பெறுவார் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தமது பங்குதாரர்களுக்கு தெரிவித்துள்ளது. சம்பளம் மட்டுமல்லாமல் மற்ற பல சலுகைகளும் ஆனந்துக்கு கிடைக்கும்.
ஆனந்த் அம்பானிக்கு லாபத்தில் கமிஷனும் வழங்கப்படும். இது தவிர, வீடு மற்றும் அதன் பராமரிப்பு, மருத்துவம், பயணம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல சலுகைகள் கிடைக்கும். தனது அல்லது மனைவியின் வணிகப் பயணத்தின் போது உதவியாளர்களுக்கான பயணம், உணவு மற்றும் தங்குமிடச் செலவுகளுக்கான பணமும் ஆனந்த் அம்பானிக்கு கிடைக்கும்.
கூடுதல் சலுகைகள்
இது தவிர, நிறுவனத்தின் வணிகத்திற்கான கார் வசதி மற்றும் வீட்டில் தொடர்புச் செலவுகளும் கிடைக்கும். ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவிக்கு மருத்துவ வசதிகளுடன், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான பாதுகாப்பையும் ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும்.
ஆனந்த் அம்பானி அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றவர். கடந்த ஆண்டு தான் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டுக்கும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.
ஆனந்த் அம்பானி தனது தாயார் நீதா அம்பானியுடன் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வாரியத்திலும் உறுப்பினராக உள்ளார். இது ரிலையன்ஸ் குழுமத்தின் தொண்டுப் பிரிவு. இது தவிர, ஆனந்த் அம்பானி விலங்குகள் மீது அதீத அன்பு கொண்டவர். எனவே, குஜராத்தின் ஜாம்நகரில் 3500 ஏக்கரில் அமைந்துள்ள வனதாரா திட்டத்தையும் அவர் கவனித்து வருகிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications