எனக்கு சொத்து எதுவும் வேண்டாம்! மக்களுக்கே தர போகிறேன்! மகனை இழந்த வேதாந்தா அனில் அகர்வால் அறிவிப்பு
மும்பை: நாட்டின் முக்கிய தொழில் குழுமங்களில் ஒன்றான வேதாந்தா நிறுவனத்தின் தலைவரான அனில் அகர்வால் மகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தனது மகனின் மரணம் தொடர்பாக உருக்கமான போஸ்ட்டை பகிர்ந்துள்ள அனில் அகர்வால், இனி தான் சம்பாதிப்பதில் 75%ஐ சமூக சேவைகளில் செலவிடப்போவதாக அனில் அகர்வால் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் மிக முக்கியமான தொழில் குழுமங்களில் ஒன்று வேதாந்தா.. இந்தக் குழுமத்தின் தலைவராக அனில் அகர்வால் இருக்கிறார். இந்த நிறுவனம் காப்பர், அலுமினியம், ஜின்க், இரும்பு போன்ற கனிமங்களை உற்பத்தி செய்வதில் முக்கியமான கம்பெனியாக இருக்கிறது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் கூட இந்த நிறுவனத்திற்குச் சொந்தமானது தான்.

அக்னிவேஷ் மரணம்
இந்த வேதாந்தா குழுமத்தின் தலைவரான அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) திடீரெனக் காலமானார். அமெரிக்காவில் பனிச்சறுக்கு செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அக்னிவேஷ் அகர்வால் மவுண்ட் சினாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். மருத்துவர்களும் திடீர் மாரடைப்பே மரணத்திற்கான காரணம் என்பதை உறுதி செய்துள்ளனர்.
வேதாந்தா நிறுவனர்
தனது மகனின் இழப்பை வாழ்வின் இருண்ட நாள் என அனில் அகர்வால் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் மேலும், "எனது அன்பு மகன் அக்னிவேஷ் மிகச் சீக்கிரம் எங்களை விட்டுச் சென்றுவிட்டான். அவனுக்கு 49 வயது தான் ஆகிறது. அவன் ஆரோக்கியம், உற்சாகம், கனவுகள் நிறைந்தவனாக இருந்தான். பனிச்சறுக்கு விபத்துக்குப் பின் கூட சீராகவே அவனது உடல்நிலை முன்னேறி வந்தது. ஆனால் விதி வேறு மாதிரி விளையாடிவிட்டது.. அவன் தனது தாயின் ஒளி, ஒரு நல்ல சகோதரன், நம்பிக்கைக்குரிய நண்பன், சந்திக்கும் அனைவரையும் கவர்ந்த மென்மையான ஆன்மா.
75% வருமானம் தானம்
அவன் எளிமையாகவும், அன்பும், மனித நேயமும் மிக்கவனாக இருந்தான்.. அவன் என் மகன் மட்டுமல்ல. என் நண்பன். என் பெருமை. என் உலகம். சம்பாதிப்பதில் 75% மேல் சமூகத்திற்குத் தருவதாக நான் அக்னியிடம் உறுதியளித்திருந்தேன். அந்த வாக்குறுதியை இன்று மீண்டும் சொல்கிறேன். இனி நான் எளிமையான வாழ்க்கையை முடிவு செய்துவிட்டேன். சம்பாதிப்பதில் 75%ஐ நிச்சயம் சமூக சேவைக்குச் செலவிடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.
யார் இந்த அக்னிவேஷ்
கடந்த 1976ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த அக்னிவேஷ், ராஜஸ்தான் அஜ்மேரில் உள்ள மேயோ கல்லூரியில் படிப்பை முடித்தார். கல்லூரிக்குப் பிறகு ஃபியூஜெரா கோல்ட் நிறுவனத்தை ஆரம்பித்த இவர் சில காலம் அதை நடத்தி வந்தார்.. பின்னர் ஹிந்துஸ்தான் ஜிங்க் மற்றும் வேதாந்தாவின் துணை நிறுவனமான தல்வண்டி சபோ பவர் லிமிடெட் தலைவராகவும் பணியாற்றினார்.
அக்னிவேஷின் மறைவுக்குப் பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "அக்னிவேஷ் அகர்வாலின் எதிர்பாராத மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தொடர்ந்து மனவலிமையையும் மனத் தைரியத்தையும் பெற நான் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications