ஆர்யன்கானை கைது செய்த சமீர் வான்கடேவிற்கு.. போதை பொருள் கும்பலோடு தொடர்பு.. அமைச்சர் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை சொகுசு கப்பலில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவிற்கு எதிராக தொடர் புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. இவருக்கு எதிராக ஏற்கனவே லஞ்ச புகார் உள்ளது. இந்த நிலையில் இவர் மத அடையாளத்தை மறைத்து ஏமாற்றியதாகவும், போதை பொருள் கும்பலோடு தொடர்பில் இருப்பதாகவும் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை பொருள் பார்ட்டி நடத்தியதாக நடிகர் ஷாருக்கனின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட சிலர் அக்டோபர் 3ம் தேதி முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆர்யன் கானை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவிற்கு எதிராக லஞ்ச புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கிரண் கோஷாவை என்ற தனியார் துப்பறிவு அதிகாரி சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ளார். கிரண் கோஷாவையின் பாதுகாலவர் என்று சொல்லப்படும் பிராபகர் செயில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ஆர்யன் கானை விடுவிக்க சமீர் வான்கடே லஞ்ச பேரம் நடந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

சமீர் வான்கடே

சமீர் வான்கடே

8 கோடி ரூபாயை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி வான்கடேவிற்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாகவும், இதற்காக பேரம் நடந்ததாகவும் சமீர் வான்கடேவிற்கு எதிராக பிரபாகர் செயில் குற்றஞ்சாட்டி இருந்தார். இது தொடர்பாக போதை பொருள் தடுப்பு பிரிவின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சமீர் வான்கடேவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

 நவாப் மாலிக்

நவாப் மாலிக்

இன்னொரு பக்கம் சமீர் வான்கடேவிற்கு எதிராக மகாராஷ்டிரா அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் பல்வேறு புகார்களை அடுக்கி வருகிறார். அதன்படி, சமீர் வான்கடே இந்து கிடையாது. அவர் ஒரு இஸ்லாமியர். அவரின் உண்மையான பெயர் சமீர் தாவுத் வான்கடே, இவரின் அப்பா பெயர் தாவுத் வான்கடே. இவரின் முதல் மனைவி பெயர் ஷபானா குரேஷி என்று நவாப் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியர்

இஸ்லாமியர்

இந்து என்று கூறி பொய்யாக பட்டியலின ஜாதி சர்டிபிகேட் வாங்கியதாகவும். இதன் மூலம் ஐஆர்எஸ் தேர்வில் அவர் முறைகேடு செய்ததாகவும். தனது மத அடையாளத்தை சமீர் வான்கடே மறைத்ததாகவும் நவாப் மாலிக் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் சமீர் வான்கடேவின் பிறப்பு சான்றிதழையும் வெளியிட்டு நவாப் மாலிக் வெளியிட்டு இருந்தார்.

தாவுத் வான்கடே

தாவுத் வான்கடே

நான் அவரின் தனிப்பட்ட விவகாரங்களை வெளியிட விரும்பவில்லை, ஆனால் உண்மை வெளியே வர வேண்டும். அவர் தனது மத அடையாளத்தை மறைத்துள்ளார். தலித் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை அவர் பறித்துள்ளார். நான் வெளியிட்ட பிறந்த நாள் சர்டிபிகேட், திருமண சர்டிபிகேட் பொய் என்றால் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். வழக்கு தொடுக்கட்டும் என்று நவாப் மாலிக் குறிப்பிட்டுள்ளார். சமீர் வான்கடேவின் முதல் திருமண புகைப்படத்தையும் நவாப் மாலிக் வெளியிட்டுள்ளார்.

உண்மை என்ன

உண்மை என்ன

இன்னொரு பக்கம் சமீர் வான்கடேவிற்கு சர்வதேச போதை பொருள் கும்பலோடு தொடர்ந்து இருக்கிறது. அந்த சொகுசு கப்பலில் சர்வதேச போதை பொருள் மாபியா கும்பலை சேர்ந்த சிலர் இருந்துள்ளனர். ஆனால் அவர்களை சமீர் வான்கடே கைது செய்யவில்லை. அவருக்கு அந்த கும்பலோடு தொடர்பு உள்ளது. போதை பொருள் கும்பலின் தலைவர் ஒருவரும் , அவரின் காதலியும் கையில் துப்பாக்கிகளோடு அந்த கப்பலில் இருந்துள்ளனர்.

மாபியா தலைவன்

மாபியா தலைவன்

அந்த போதை பொருள் மாபியா தலைவனுக்கு பெரிய தாடி இருக்கும். ஆனால் அவர்களை சமீர் வான்கடே கைது செய்யவில்லை. சமீபத்தில் சமீர் வான்கடே தனது குடும்பத்தோடு மாலத்தீவு சென்று வந்தார். அந்த பயணத்தை ஏற்பாடு செய்தது யார் என்று விசாரிக்க வேண்டும். எனக்கு இந்த விவரங்கள் எல்லாம் தெரியும்.

பரபரப்பு

பரபரப்பு

நான் பல முக்கிய தகவல்களை பின்பு வெளியிடுவேன். நிறைய போதை பொருள் தலைவர் சமீர் வான்கடேவிற்கு நண்பர்களாக உள்ளனர் என்று நவாப் மாலிக் குற்றஞ்சாட்டி உள்ளார். ஏற்கனவே சமீருக்கு எதிராக லஞ்ச புகார் உள்ள நிலையில் தற்போது கூடுதல் புகார்களை அமைச்சர் நவாப் மாலிக் அடுக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+