என்னாச்சு.. ஆர்யன் கான் வழக்கு விசாரணையில் இருந்து அதிகாரி வான்கடே அதிரடி நீக்கம்..!
போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் வான்கடே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்
மும்பை: நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மீதான போதை பொருள் வழக்கு விசாரணையிலிருந்து, போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் வான்கடே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் சொகுசு கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்து தொடர்பாக, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட மேலும் சிலர் கைது செய்யப்பட்டார்கள்.
அக்டோபர் மாதம் 3 ம் தேதி மும்பை போதைமருந்து தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே என்பவர்தான், ஆர்யன்கானை கைது செய்தவர் ஆவார்.

குற்றச்சாட்டு
சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யான் கானுக்கு கடந்த 28ம் தேதி மும்பை ஹைகோர்ட் ஜாமீன் வழங்கியது... இந்த விவகாரத்தில் ஆர்யான் கானை விடுவிக்க, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் பல்வேறு வழக்குகளில் அவர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்..

நீக்கம்
அதுமட்டுமல்ல, வழக்கின் முக்கிய சாட்சியான பிரபாகர் ரஃகோஜி சயில் "விசாரணை அதிகாரி சமீர் வான்கடேவால் என்னுடைய உயிருக்கு ஆபத்து" என்றும் கூறி பிரமாண பத்திரம் ஒன்றை 2 வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஆர்யன் கான்போதைப் பொருள் வழக்கில் இருந்து விசாரணை அதிகாரி சமீர் வான்கடே நீக்கப்பட்டுள்ளார்.. மேலும் ஆர்யான் கான் உள்ளிட்ட 6 வழக்குகள் குறித்த விசாரணை, வான்கடேவிடம் இருந்து டெல்லியில் உள்ள சிறப்பு விசாரணைக்குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

விசாரணை
அந்த குழுவிற்கு ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் குமார் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நிர்வாக காரணங்களுக்காக இவ்வழக்குகள் மாற்றப்பட்டுள்ளதாக விளக்கம் தரப்பட்டுள்ளது.. இந்த வழக்கு விசாரணையில் இருந்து எந்த அதிகாரியும் நீக்கப்படவில்லை என்றும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக்குழுவுக்கு உதவி செய்வார்கள் என்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மாற்றம்
அதேபோல ஆர்யன் கான் வழக்கு தவிர தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் நவாப் மாலிக் மருமகன் சமீர் கான் மற்றும் நடிகர் அர்மான் கோலி ஆகியோர் மீதான வழக்கு விசாரணையும் சமீர் வான்கடேவிடம் இருந்து டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.. இதுகுறித்து வான்கடே கூறும்போது, "இந்த வழக்கை சிபிஐ அல்லது என்ஐஏ விசாரிக்க உத்தரவிட கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளேன்.. நான் இதில் இருந்து நீக்கப்படவில்லை. தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை இயக்குநராக இருக்கிறேன்" என்று விளக்கம் தந்துள்ளார்.

விளக்கம்
இதுகுறித்து என்சிபி வட்டாரங்கள் சொல்லும்போது, "தேசிய, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற 5 வழக்குகள் மத்திய பிரிவின் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் ஆர்யன் கான் வழக்கும் ஒன்று" என்று தெரிவித்தன. இதனிடையே, இந்த மாற்றம் குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கிடம் கேட்டதற்கு, "இது ஆரம்பம்தான்" என்று மட்டும் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications