மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யெஸ் வங்கியை போல் மேலும் சில வங்கிகள் திவாலாகுமா.. அச்சம் வேண்டாம்.. ரிசர்வ் வங்கி உறுதி

Google Oneindia Tamil News

மும்பை: யெஸ் வங்கியை தொடர்ந்து வேறு சில வங்கிகளும் திவால் ஆகலாம் என ஊடகங்களில் செய்திகள் பரவிய நிலையில், அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பணத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Recommended Video

    Yes Bank : என்ன ஆனது? வாடிக்கையாளர்கள் என்ன செய்வது?

    இந்தியாவில் யெஸ் வங்கியை தொடர்ந்து மேலும் சில வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் திவால் நிலைக்கு செல்லலாம் என்றும் சில சமூக ஊடகங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின.

    assures all depositors that there is no such concern of safety of their deposits in any bank: RBI

    இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வேறு சில வங்கிகள் திவால் ஆகலாம் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இவை சில ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அது உண்மையல்ல. ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளையும் கண்காணித்து வருகிறது. எனவே டெபாசிட் தாரர்கள் யாரும் வங்கியில் உள்ள பணத்தின் பாதுகாப்பு குறித்துஅச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் கூறுகையில், இந்திய வங்கிகள் போதுமான மூலதன இருப்பு வைத்துள்ளன. எனவே எந்த பாதிப்பும் ஏற்படாது. கவலை கொள்ள வேண்டாம் என்றார்.

    நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி திவால் நிலைக்கு செல்லும் அளவுக்கு வாராக்கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்த வங்கியின் நிர்வாகத்தை கையில் எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, அந்த வங்கி வாடிக்கையாளர்கள் வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை ரூ.50000க்கு மேல் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இதனால் அந்த வங்கி வாடிக்கையாளர்கள் பலர் கணக்கை முடித்துக்கொண்டு பணத்தை மொத்தமாக எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே யெஸ் வங்கியை காப்பாற்றும் முயற்சியாக அதன் 49 சதவீத பங்குகளை பாரத ஸ்டேட் வங்கி வாங்குவதாக அறிவித்துள்ளது. அத்துடன் அந்த வங்கியில் பணம் போட்ட யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆறுதல் கூறியுள்ளது.

    English summary
    RBI closely monitors all the banks and hereby assures all depositors that there is no such concern of safety of their deposits in any bank
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X