3 பேர்.. 6 தோட்டா.. பாபா சித்திக் கொலை.. பொறுப்பேற்ற பிரபல ரவுடி.. பதற்றத்தில் சல்மான் கான்
மும்பை: மகாராஷ்ரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அரசியல் கொலை அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இந்த கொலைக்கு பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் டீம் பொறுப்பேற்றுள்ளது. அவர்களின் திட்டம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவராக இருந்தவர் பாபா சித்திக். அவர் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் முன்னணி நிர்வாகியாக இருந்தார். எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவி வகித்துள்ளார். பாபா சித்திக், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். நேற்று இரவு அவர், மும்பையில் உள்ள தனது மகன் சீசன் சித்திக் அலுவலகத்தில் இருந்தார். அப்போது துர்கா சிலை ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அந்த பகுதியே புகை மண்டலமாக இருந்துள்ளது. அப்போது அங்கு பைக்கில் வந்த மூன்று மர்மநபர்கள் பாபா சித்திக்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பாபா சித்திக் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் பாபா சித்திக்கை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாபா சித்திக் கொலைக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கேங் பொறுப்பேற்றுள்ளது. சிறையில் உள்ள லாரன்ஸ், தன் கூட்டாளிகளுடன் சிறையில் வைத்தே பாபா சித்திக் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளார்.
இதுகுறித்து மும்பை காவல்துறையினர் கூறுகையில், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை. குற்றவாளிகள் கடந்த சில மாதமாகவே வாடகை வீடு எடுத்து பாபா சித்திக்கின் நடவடிக்கையை கண்காணித்துள்ளனர். அவர்களுக்கு அட்வான்ஸாக ரூ.50,000 வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் தான், கூரியர் மூலம் ஆயுதங்கள் அவர்களின் கைக்கு வந்து சேர்ந்துள்ளது.
3 பேரும் ஆளுக்கு தலா இரண்டு முறை என்ற அடிப்படையில் பாபா சித்திக்கை சுட்டுள்ளனர். மொத்தம் 6 தோட்டக்கள் சுடப்பட்டதில், அவற்றில் 4 தோட்டாக்கள் பாபா சித்திக்கின் உடலில் பாய்ந்தது. பஞ்சாப் சிறையில் வைத்துதான் கொலைக்கான திட்டங்களை வகுத்துள்ளனர். என்றனர்.
பாபா சித்திக்கின் மகன் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாபாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அவருக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாபா சித்திக்கின் கொலைக்கு தொழில் போட்டி, குடிசைப் பகுதி சீரமைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் காரணமாக இருக்கலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் அந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் அமைப்பு கூறியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பாபா சித்திக், நடிகர் சல்மான் கானுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார். சல்மான் கான் மான் வேட்டை காலத்தில் இருந்தே, லாரன்ஸ் பிஷ்னோய் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜெய் ஶ்ரீராம், ஜெய் பாரத் சல்மான் கான் உங்களால் தான், உங்கள் சகோதரர் உயிரை விட்டுள்ளார்.
எங்களுக்கு யாருடனும் பகை இல்லை. சல்மான் கானுக்கும், தாவூத் இப்ராஹிமுக்கும் யாரெல்லாம் உதவி செய்கிறார்களோ அவர்களுக்கும் இதே நிலை தான். என்று எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக சல்மான் கான் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications