ஓய் பிரிவு பாதுகாப்பில் இருந்த பாபா சித்திக் சுட்டுக்கொலை.. 15 நாட்களுக்கு முன்பே மிரட்டல்.. பரபர
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கிற்கு 15 நாட்களுக்கு முன்பே அச்சுறுத்தல் வந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு அவருக்கு ஒய் பிரிவாக அதிகரிக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு வளையத்தில் இருந்த தலைவரான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாரஷ்டிராவில் துணை முதல்வர் அஜித் பவார் உள்ளார். இவரது தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் பாபா சித்திக். முன்னாள் அமைச்சரான இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர்களில் ஒருவருமாக இருந்தார். இவர் நேற்று மாலை, மும்பை பந்திராவில் உள்ள நிர்மல் நகர் என்ற இடத்தில் தசரா கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்தார்.

தனது அலுவலகம் அமைந்துள்ள இந்த இடத்திற்கு அருகே பாபா சித்திக் நின்ற போது, அவரை பின் தொடர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர் மீது 3 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இதில் வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த பாபா சித்திக், படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மும்பை போலீசார் அவரை மீட்டு அருகே இருந்த லீலாவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மூன்று பேரில் இருவரை போலீசார் பிடித்தனர். கைதான நபரில் ஒருவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவரர் என்பதும் மற்றொருவர் ஹரியானாவை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சித்திக் பாபாவிற்கு 15 நாட்கள் முன்பே மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு ஒய் பிரிவாக அதிகரிக்கபப்ட்டது. இருந்த போதிலும் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதில் லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாமோ என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகிறார்கள். லாரன்ஸ் பிஸ்னோய் பாகிஸ்தான் அருகிலுள்ள பஞ்சாப் பெரோஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2008-ம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலின்போது தனது நண்பர் கோல்டி பிரரின் எதிரணி வேட்பாளரை லாரன்ஸ் துப்பாக்கியால் சுட்டார்.
இதற்காகக் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தார். அதன் பிறகும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த லாரன்ஸ் பிஸ்னோயை மிரட்டிப் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டார். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா படுகொலையில் முக்கிய குற்றவாளியாகக் லாரன்ஸ் பிஸ்னோய் கருதப்படுகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications