திவாலான தந்தை; 2,000 கோடி கம்பெனியை மீட்ட மகன்! யார் இந்த ஜெய் அன்மோல் அம்பானி
மும்பை: அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானி தனது தந்தை இழந்த வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை மீட்டுக் கொடுத்து நிறுவனத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அது எப்படி நடந்தது?
கடந்த 25 ஆண்டுகள் முன்னால் இந்தியாவின் மாபெரும் பணக்காரர் யார்? என கேட்டால், உடனே பலரும் தரும் பதில் திருபாய் அம்பானி. அந்தளவுக்கு டாடா, பிர்லாவை விட முன்னணியிலிருந்த பணக்காரர் இவர். இவருக்கு இரண்டு மகன்கன். மூத்த பிள்ளை முகேஷ் அம்பானி. அடுத்து இளைய பிள்ளை அனில் அம்பானி. வர்த்தக சாம்ராஜ்ஜியத்தில் அண்ணன் முகேஷ் அம்பானி அதிகம் புகழ் பெற்றார். ஆனால், தம்பி அனில் சாம்ராஜ்ஜியம் நிறையவே சரிவுகளைச் சந்தித்தார்.

கிட்டத்தட்ட 2,000 கோடி நிறுவனத்தைக் கட்டிக்காப்பாற்ற முடியாமல் தத்தளித்தார் அனில் அம்பானி. அப்பாவின் சரிவை தூர நின்று வேடிக்கைப் பார்க்காமல் தனது தோளில் தூக்கிச் சுமந்த, திவாலான கம்பெனியை மீண்டு தந்தையின் கையில் மீட்டுக் கொடுத்துள்ளார் ஜெய் அன்மோல் அம்பானி. இதன் மூலம் வர்த்தக உலகில் புதிய வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டுள்ளார் ஜெய். இவரின் வெற்றிக் கதைதான் இது.
அப்பா இழந்த பாரம்பரிய பெருமையை அன்மோல் திரும்ப மீட்டு எடுத்தது எப்படி? அதுதான் பிசினஸ் உலகம். விஜய் பாணியில் சொன்னால், வென்றவன் தோற்பான். மீண்டும் தோற்பவன் ஜெயிப்பான். ஒரே இரவில் இந்த மாற்றம் நடக்கலாம். அது ஒரு தலைமுறையை கூட புரட்டிப் போடலாம். அனில் அம்பானியின் வாழ்க்கை போதிக்கும் பாடம் அதுதான்.
முகேஷ் அம்பானியின் குடும்பத்தைப் பலரும் அறிந்திருப்பார்கள். சமீபத்தில் அவரது மகன் திருமணத்தின் முன்வைபோக நிகழ்வுகள் தடபுடலாக நடந்ததே நாட்டின் தலைப்பு செய்தியாக இருந்தது. ஆனால், இதற்கு நேர்மாறாக இவரது சகோதரர் அனில் அம்பானி பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
அண்ணன் அளவுக்கு வாழ்க்கையில் அதிக வெளிச்சம் பெறாத அனில் அம்பானிக்கு கலங்கரை விளக்காக நின்று வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார் ஜெய் அன்மோல் அம்பானி. முகேஷ் அம்பானி எந்தளவுக்கு சக்சஸ் மூலம் அறியப்பட்டாரோ அதே அளவுக்கு தனது கம்பெனி தொடர்ந்து நஷ்டமடைந்து வருவதன் மூலம் எதிர்மறையாகப் பேசப்பட்டார் அனில். இவரின் மூத்த மகந்தான் ஜெய் அன்மோல் அம்பானி.
ஆரம்பக்கால வாழ்க்கை: ஜெய் அன்மோல் அம்பானி பிறந்தது டிசம்பர் 12, 1991. இன்றைய தேதிக்கு அவர் 32 வயது இளைஞர். இவர் செவன் காக்ஸ் பள்ளியில் படிக்க இங்கிலாந்துக்குச் செல்வதற்கு முன்பு மும்பையில் இருந்த பிரபலமான கதீட்ரல் அண்ட் ஜான் கானான் பள்ளியில் படித்தார். அதன் பிறகு இங்கிலாந்தில் உள்ள வார்விக் பிசினஸ் ஸ்கூலில் இளங்கலை அறிவியலில் (பிஎஸ்சி) பட்டம் பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை : இவருக்கு 2021 திருமணம் நடந்தது. க்ரிஷா ஷாவை மணம் புரிந்து கொண்டார். மும்பையின் பிரத்யேக கஃபே பாரண்டே பகுதியில் உள்ள பூர்வீக வீடான சீ விண்ட் பங்களாவில் திருமணம் ஆடம்பரமாக நடந்தது. அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மனைவி கிரிஷா ஷா யார்?: நிகுஞ்ச் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் முன்னாள் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மறைந்த நிகுஞ்ச் ஷாவின் மகள்தான் கிரிஷா ஷா.
ஜெய் அன்மோல் சொத்து மதிப்பு: இளம் வயதிலேயே, ஜெய் அன்மோல் அம்பானிக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன. ஜாக்ரன் இணையதளத்தின் தரவுபடி இவரது சொத்துகளின் நிகர மதிப்பு 3.3 பில்லியன் டாலர்(ரூ.20,000 கோடி) ஆக உள்ளது. இவர் ஒரு கார் பிரியர். திடீர் பணக்காரர்களே விதவிதமாக கார் வாங்கி குவிக்கும் போது, பிறவி பணக்காரரான இவர் வாங்கி அடுக்கி வைக்க மாட்டாரா?
இவரது சேகரிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், லம்போர்கினி கல்லார்டோ ஆகிய சொகுசு வாகனங்கள் இருக்கின்றன. கூடவே தனியார் ஜெட் விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் வைத்துள்ளார். ஜெய் வணிக பயணத்திற்காக தனியார் ஜெட் விமானங்களையும் ஹெலிகாப்டர்களை வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் பரவியுள்ளது. ஆனால், அதை வதந்தி என்றும் சொல்கிறார்கள்.
ஜெய் அன்மோல் தனது பிசினஸ் வாழ்க்கையை 18வது வயதில் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் கோடைக்கால இன்டர்ன்ஷிப்புடன் தொடங்கினார். பிறகு 2014 இல் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் சேர்ந்தார். செப்டம்பர் 2017 இல், ரிலையன்ஸ் கேபிட்டலின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பு ஏற்றார். இதுவே அவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கச் சாதனை. கடந்த ஏப்ரல் 2018 இல் ரிலையன்ஸ் நிப்பான் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் வாரியங்களில் சேர்ந்தார். இவரும் அவரது சகோதரர் ஜெய் அன்ஷுல் அம்பானியும் ரிலையன்ஸ் இன்ஃப்ரா போர்டில் இருந்து நியமிக்கப்பட்ட ஒரே வருடத்திற்குள் ராஜினாமா செய்தனர்.
தந்தையின் நிறுவனத்தை இவர் கவனிக்கத் தொடங்கியது முதல் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 40% உயர்ந்தது என்கிறது டைம்ஸ்நவ் செய்திக் குறிப்பு. அதன் மூலம் திவாலான தந்தையின் சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் உயர்த்தி நிறுத்தி இருக்கிறார் இந்த மகன்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications