மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜூலையில் 14 நாட்கள் வங்கிகளுக்கு லீவ்.. எங்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை?

Google Oneindia Tamil News

மும்பை: ஜூலை மாதம் 14 நாட்கள் பொதுத்துறை வங்கிகள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.

வழக்கமாகவே வாரந்தோறும் ஞாயிறுக்கிழமை மற்றும் மாதத்தின் முதல் மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அடுத்த மாதம் வார விடுமுறைகள் உட்பட பல்வேறு விடுமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.

Banks closed for 14 days in July - Bank holidays list state wise

ஜூலை 1: கங் (ரதயாத்திரை) க்காக ஒடிசா தலைநகர் புவனேஷ்வர் மற்றும் மணிப்பூர் தலைவர் இம்பாலில் வங்கிகளுக்கு விடுமுறை

ஜூலை 3: ஞாயிறு (வார விடுமுறை)

ஜூலை 5: குரு ஹர்கோபிந்த் சிங் பிரகாஷ் திவாஸ் காரணமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

ஜூலை 7: கர்சி பூஜா காரணமாக திரிபுரா தலைநகர் அகர்தலாவில் வங்கிகள் செயல்படாது.

ஜூலை 9: முதல் சனிக்கிழமை, பக்ரீத் பண்டிகை

ஜூலை 10: ஞாயிறு (வார விடுமுறை)

ஜூலை 11: பக்ரீத் பண்டிகையின் மூன்றாவது நாள் ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் விடுமுறை

ஜூலை 12: பானு ஜெயந்தி காரணமாக சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் வங்கிகள் விடுமுறை

ஜூலை 14: மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் விடுமுறை

ஜுலை 16: உத்தராகண்ட் தலைநகர் டேராடூனுக்கு விடுமுறை

ஜூலை 17: ஞாயிறு (வார விடுமுறை)

ஜூலை 23: 4வது சனிக்கிழமை

ஜூலை 31: ஞாயிறு (வார விடுமுறை)

English summary
Banks closed for 14 days in July - Bank holidays list state wise: ஜூலை மாதம் 14 நாட்கள் பொதுத்துறை வங்கிகள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X