கட்சி மாறும் முக்கிய "தலை.." மகாராஷ்டிரா தேர்தலில் இதுதான் கேம் சேஞ்சர்.. சரத் பவார் போடும் பிளான்
மும்பை: மகாராஷ்டிராவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த மிக முக்கிய தலைவர் ஒருவர் தங்கள் கட்சியில் சேரவுள்ளதாக சரத் பவார் என்சிபி தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிர தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்துவோம் என்றும் சரத் பவார் தரப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

அங்கே எதிர்க்கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸ், தாக்ரே சிவசேனா மற்றும் சரத் பவார் என்சிபி ஆகிய கட்சிகள் உள்ளன. அங்கு வரும் நவ. மாதம் தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
சரத் பவார் தரப்பு: இதற்கிடையே சரத் பவாரின் என்சிபி தரப்பு சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் சில வாரங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், வேறு ஒரு கட்சியில் இருக்கும் மிக முக்கிய தலைவர் ஒருவர் தங்கள் கட்சியில் இணைய உள்ளதாக என்சிபி சரத் பவார் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்தார். அங்கு சில வாரங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், இது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதேநேரம் யார் அந்த தலைவர்.. எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறித்த தகவல்களைப் பகிர ஜெயந்த் பாட்டீல் மறுத்துவிட்டார். இது ஒரு பக்கம் இருக்க மகாராஷ்டிராவில் தேர்தல் நெருங்கும் நிலையில், பல தலைவர்கள் சரத் பவார் என்சிபி கட்சியில் இணைய ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அக்கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மகாராஷ்டிர அரசியல்: மகாராஷ்டிராவில் இப்போது ஷிண்டே முதல்வராக இருக்கிறார். அங்கு பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி ஆட்சியில் உள்ளன. இந்த அரசு செயல்பட்ட விதம் குறித்து மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுவதாக சரத் பவார் தரப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சரத் பவார் தரப்பு என்சிபி செய்தித் தொடர்பாளர் மகேஷ் தபசே கூறுகையில், "தற்போதுள்ள என்டிஏ கூட்டணி ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். நான் அடித்துச் சொல்கிறேன் இந்த கூட்டணி மகாராஷ்டிர தேர்தலில் 100 சீட்களுக்கு மேல் பெறாது.
கடும் அதிருப்தி: மத்திய அரசு மீது மகாராஷ்டிர மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த எதிர்ப்பு வெளிப்படையாகவே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்த தலைவர்கள் வரும் போது இந்த எதிர்ப்பு அதிகரிக்கவே செய்கிறது. இந்த தேர்தலில் அவர்கள் எத்தனை சதவிகித வாக்குகள் வாங்குகிறார்கள் என்பதைப் பார்த்தாலே இது உங்களுக்குப் புரியும். என்னைக் கேட்டால் குறைந்தது 10% வரை அவர்கள் வாக்கு வங்கி குறையும்.
பாஜகவை பொறுத்தவரை எப்போதும் அவர்கள் டெல்லி தலைவர்களே வைத்தே வாக்காளர்களைக் கவர்வார்கள். அவர்களையே பாஜக பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் இந்த முறை மகாராஷ்டிர மக்கள் அவர்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அங்குள்ள மக்களுக்கு இப்போது வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் தேவை.. ஆனால், இப்போதுள்ள அரசு அதைத் தரவில்லை. இதுவும் ஒரு காரணம்.
மேலும், உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரின் எம்எல்ஏக்களை தங்கள் வசப்படுத்தி அரசியலமைப்பிற்கு விரோதமான கூட்டணியை மகாராஷ்டிராவில் உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாகவும் மகாராஷ்டிர மக்கள் பாஜக மீது கடும் கோபத்தில் உள்ளனர்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications