இன்ஸ்டாவில் 55 லட்சம் பாலோயர்! ஆனா தேர்தலில் கிடைச்சது வெறும் 155 வாக்குகள்! நோட்டோவுக்கு கூட அதிகம்
மும்பை: மகாராஷ்டிராவில் இன்று சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் வெர்சோவா தொகுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகரும், அரசியல்வாதியுமான அஜாஸ் கான் போட்டியிட்டார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 55 லட்சம் பாலோயர்ஸ்கள் உள்ள போதிலும், தேர்தலில் அவருக்கு வெறும் 155 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இது நோட்டோவுக்கு விழுந்த வாக்குகளை விட குறைவாகும்.
மகாராஷ்டிராவில் கடந்த நவ. 20ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிராவில் மொத்தம் 288 இடங்கள் உள்ள நிலையில், அங்கு 145 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியை அமைக்க முடியும். அங்கு இந்த முறை கடும் போட்டி இருக்கும் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக இருந்தது. பாஜக கூட்டணி மகாராஷ்டிராவில் இமாலய வெற்றி பெற்றது.
மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 230ஐ கைப்பற்றுகிறது. மாலை 6 மணி நிலவரப்படி230 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது. பாஜக மட்டும் 132 தொகுதிகளில் (முன்னிலை + வெற்றி) கைப்பற்றுகிறது. ஷிண்டே சிவசேனா 54 இடங்களிலும், என்சிபி 41 இடங்களிலும் கைப்பற்றுகிறது. மறுபுறம் கடும் போட்டி தரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கூட்டணி மொத்தம் வென்றதே 51 சீட்கள் தான். அதிகபட்சமாக தாக்கரே சிவசேனா 21 இடங்களில் வென்ற நிலையில், காங்கிரஸ் 17 இடங்களிலும், என்சிபி சரத் பவார் 10 இடங்களை மட்டுமே கைப்பற்றுகிறது.
சுவாரசியம்: இந்த முறை மகாராஷ்டிரா தேர்தலில் பல சுவாரசியங்கள் நடந்துள்ளன. குறிப்பாக வெர்சோவா என்ற தொகுதியில் போட்டியிட்ட அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகளை மட்டுமே பெற்று இருக்கிறார்.
155 வாக்குகள்: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அஜாஸ் கான் சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியில் இருக்கிறார். அவர் இந்த முறை மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெர்சோவா தொகுதியில் போட்டியிட்டார். இருப்பினும், வெறும் 155 வாக்குகளை மட்டுமே பெற்று மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளார். அதில் விஷயம் என்னவென்றால் நோட்டாவை விட இவருக்குக் குறைவான வாக்குகளைக் கிடைத்துள்ளது. இந்த தொகுதியில் நேட்டோவுக்கு 1,298 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், அதை விடக் குறைவான வாக்குகளையே அஜாஸ் கான் பெற்றுள்ளார்.
55 லட்சம் பாலோயர்ஸ்: இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த அஜாஸ் கானுக்கு இன்ஸ்டாகிராம் தளத்தில் சுமார் 55 லட்சம் பாலோயர்ஸ்கள் உள்ளனர். நிச்சயம் அவரது தொகுதியில் சில நூறு பேராவது அவரை பாலோ செய்து இருப்பார்கள். அவர்கள் வாக்களித்து இருந்தால் கூட அஜாஸ் கான் அதிக வாக்குகளைப் பெற்று இருப்பார் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களும் கள தேர்தல் அரசியலும் எந்தளவுக்கு வேறுபட்டது என்பதை உணர்த்துவதாகவே இது இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருந்தால் மட்டுமே அதை வைத்துத் தேர்தலில் வெல்ல முடியாது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
வெர்சோவா தொகுதியைப் பொறுத்தவரை அங்கு சிவசேனாவின் (தாக்கரே) ஹாரூன் கானுக்கும், பாஜகவின் பாரதி லவேகருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் வெறும் 1,600 வாக்குகள் வித்தியாசத்தில் ஹரூன் கான் வெற்றி பெற்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications