இந்துக்களிடையே கலவரத்தை தூண்டுவதுதான் பாஜகவின் 'இந்துத்துவா'.. உத்தவ் தாக்கரே கடும் தாக்கு
"ஏதோ தாங்கள்தான் இந்துத்துவா என்ற ரீதியில் பாஜகவினர் பேசி வருகிறார்கள். புரிந்துகொள்ளுங்கள்.. நீங்கள் (பாஜக) இந்துத்துவா அல்ல. நீங்கள் செய்வது இந்துத்துவா அரசியலும் இல்லை"
மும்பை: இந்துக்களிடையே கலவரத்தை தூண்டி அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் பாஜகவின் இந்துத்துவா அரசியல் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
மேலும், அடிமையாக இருந்து அதிகாரத்தில் இருப்பதை விட, மக்களுக்காக குரல் கொடுக்கும் போராளியாக இருப்பது எவ்வளவோ மேல் என்றும் அவர் தெரிவித்தார்.
சிவசேனா கட்சியும், சின்னமும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சொந்தமானதை அடுத்து பாஜகவினருக்கும், உத்தவ் தாக்கரே அணியினருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உருவாகியுள்ளது.

கொந்தளிக்கும் அரசியல் களம்
யார் உண்மையான சிவசேனா என உத்தவ் தாக்கரே அணிக்கும், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் இடையே நடந்து வந்த பிரச்சினைக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. சிவசேனா கட்சி பெயரும், அதன் வில் அம்பு சின்னமும் ஷிண்டே அணிக்குதான் சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காலம் காலமாக தங்கள் கட்சியாக இருந்த சிவசேனா, தற்போது மாற்று அணிக்கு சொந்தமானதால் உத்தவ் தாக்கரே அணியினர் கொந்தளிப்பில் உள்ளனர்.

உத்தவை சீண்டும் பாஜக
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, பாஜக தலைவர்கள் உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவுக்கு பச்சை துரோகம் செய்ததால் தனது கட்சியை உத்தவ் தாக்கரே இழந்துவிட்டார் என்றும், முதல்வர் பதவிக்காக இந்துத்துவா கொள்கையை விட்டுக்கொடுத்து முற்றிலும் முரணான சித்தாந்தவாதிகளுடன் கூட்டணி அமைத்ததால் இன்று அரசியல் அநாதையாக உத்தவ் மாறிவிட்டார் எனவும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

பாஜகவின் இந்துத்துவா
இது ஒருபுறம் இருக்க, பாஜகவையும் அதன் அரசியலையும் கடுமையாக சாடி வருகிறார் உத்தவ் தாக்கரே. இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறுகையில், "பாஜகவை விட்டுதான் நான் வெளியே வந்தேனே தவிர, இந்துத்துவாவை விட்டு வரவில்லை. ஏதோ தாங்கள்தான இந்துத்துவா என்ற ரீதியில் பாஜகவினர் பேசி வருகிறார்கள். புரிந்துகொள்ளுங்கள்.. நீங்கள் (பாஜக) இந்துத்துவா அல்ல. நீங்கள் செய்வது இந்துத்துவா அரசியலும் இல்லை. இந்துக்கள் மத்தியிலேயே சண்டையை மூட்டிவிட்டு, கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் பாஜகவின் இந்துத்துவா.

"முதுகில் குத்திய அமித்ஷா"
ஆனால், எனது தந்தை பால் தாக்கரே எனக்கு போதித்த இந்துத்துவா வேறு. எங்கள் இந்துத்துவா பாரத தேசத்துடன் தொடர்புடையது. அனைவரையும் அரவணைத்து செல்வது. கலவரம் உருவாக்குவது அல்ல. 2019 தேர்தலுக்கு முன்பு எனது வீட்டு படியேறி என்னிடம் உதவி கேட்டார் அமித் ஷா. முதல்வர் பதவியை தருகிறோம் என உறுதியளித்தார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்க வேண்டும் என்பது பால் தாக்கரேவின் விருப்பமாக இருந்தது. அதனால்தான் அதற்கு நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்த உறுதிமொழியை நிறைவேற்ற மறுத்தது பாஜக. அவர்கள் முதுகில் குத்தியதால்தான் நான் கூட்டணியை முறித்து வெளியேறினேன். அடிமையாக இருந்து அதிகாரத்தில் இருப்பதை விட, மக்களுக்காக குரல் கொடுக்கும் போராளியாக இருப்பது எவ்வளவோ மேல்" என உத்தவ் தாக்கரே கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications