கடவுள் ராமரை பாஜக வேட்பாளராக அறிவிக்க வேண்டியது தான் பாக்கி.. பாஜகவை விளாசிய சிவசேனா.. கடும் அட்டாக்
மும்பை: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் பாஜகவை சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2019 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து கோவில் கட்டும் பணி என்பது தொடங்கியது.

கோவில் கட்டுமானத்துக்காக தனியாக அறக்கட்டளை அமைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். இதையடுத்த பணிகள் என்பது விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தம் 3 அடுக்குகளாக கோவில் கட்டும் பணி கடந்த 2019 ம் ஆண்டு தொடங்கியது. தற்போது முதற்கட்ட பணிகள் நடந்து முடிந்தது. இதையடுத்து 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடத்தப்பட உள்ளது. அன்றைய தினம் கோவில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், மடாதிபதிகள், சாமியார்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் கோவில் அறக்கட்டளை சார்பில் விழாவில் பங்கேற்க வரும்படி எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க கோரி அழைப்பிதழ் வந்துள்ளதா? என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணியை சேர்ந்த எம்பி சஞ்சய் ராவத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சஞ்சய் ராவத் பாஜகவை கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛அயோத்தி ராமர் கோவில் விஷயத்தில் பாஜக அரசியல் செய்து வருகிறது. தற்போதைய சூழலில் கடவுள் ராமரை பாஜகவின் வேட்பாளர் என அறிவிப்பது மட்டுமே பாக்கியாக இருக்கிறது. ஏனென்றால் ராமரின் பெயரில் நிறைய அரசியலை பாஜக செய்து வருகிறது'' என்றார்.
முன்னதாக, ‛‛ராமர் கோவில் கும்பாபிஷேகம் என்பது பாஜகவின் நிகழ்ச்சியாகும். அது தேசிய அளவிலான நிகழ்ச்சியாக இல்லை. இந்த நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே நிச்சயம் கலந்து கொள்வார். கோவிலில் பாஜகவின் நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு தான் அவர் அங்கு செல்ல உள்ளார். '' என சாடியிருந்தார். இத்தகைய சூழலில் மீண்டும் பாஜகவை சஞ்சய் ராவத் எம்பி விமர்சனம் செய்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications