பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்.. ரஜினியின் காலா பட வில்லன்.. ரசிகர்கள் சோகம்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார். இயக்குனர், நடிகர், எழுத்தாளர், நாடக கலைஞர், ஓவியக் கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவர். நடிகர் ரஜினிகாந்தின் காலா மற்றும் பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார். அவருக்கு வயது 75. நடிகர் நானா படேகர் கோவாவில் உள்ள டோனா பாலா பகுதியில் உள்ள இல்லத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு 45 நிமிடங்களுக்கு மேல் சிபிஆர் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவர் உயிரிழந்தார். மாரடைபால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் பிறகே அவர் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும்.

பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். இதே போன்று இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த பொம்மலாட்டம் படத்திலும் நடித்து இருந்தார். நடிகர் நானா படேகர் 3 முறை தேசிய திரைப்பட விருதுகளும், 2013-ல் பத்மஸ்ரீ விருதினையும் பெற்று இருக்கிறார். மகாராஷ்டிராவில் ஏழை விவசாயிகளுக்காக நாம் பவுண்டேசன் என்ற அமைப்பையும் நடத்தி வந்தார். இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
