ப்ளீஸ் விட்ருங்க.. அடிக்க பாய்ந்த கும்பலிடம் கெஞ்சிய பிரபல நடிகை ரவீணா டாண்டன்.. பரவும் வீடியோ
மும்பை: மும்பையை சேர்ந்த பிரபல நடிகை ரவீணா டாண்டனின் கார் இடித்ததில் பெண்கள் சிலர் காயம் அடைந்ததாக கூறி அவரை கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டு அடிக்க பாயும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மும்பையை சேர்ந்தவர் பிரபல நடிகை ரவீணா டாண்டன். 52 வயதான இவர் பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இந்தி திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ரவீணா டாண்டன் மும்பையில் தாறுமாறாக காரில் வந்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ரவீணா டாண்டனையும் அவரது கார் டிரைவரையும் கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டு அடிக்க பாயும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் வருமாறு:-
மும்பை பாந்திரா கார்டர் ரோடு பகுதியில் நடிகை ரவீணா டாண்டன் நேற்று இரவு காரில் சென்றுள்ளார். அப்போது ரவீணா டாண்டனின் காரை ஒரு கட்டிடம் அருகே டிரைவர் பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பெண்கள் சிலர் மீது கார் இடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ரவீணா டாண்டனையும் அவரது டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் டிரைவர் யார் மீதும் காரை இடிக்கவில்லை என ரவீணா டாண்டனின் கார் டிரைவர் கூறியிருக்கிறார். இதன் காரணமாக அங்கு இருந்தவர்களுக்கும் டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கார் டிரைவரை அந்த கும்பல் தாக்கியதாக தெரிகிறது. இதனால் காரை விட்டு இறங்கிய ரவீணா டாண்டன், கும்பலை சாமாதனப்படுத்த முயன்று உள்ளார்.
அப்போது ரவீணா டாண்டனை அந்த கும்பல் தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ப்ளீஸ் அடிக்க வேண்டாம் என ரவீணா டாண்டன் கூறுகிறார். மேலும் வீடியோ எடுக்க வேண்டாம் என்றும் ரவீணா டாண்டன் சொல்லும் காட்சிகள் அடங்கியிருக்கின்றன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவில் பேசும் பெண் ஒருவர், கார் இடித்ததில் எனது மூக்கில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. போலீசாரை அழைக்க போகிறேன். இன்று இரவு ஜெயிலில் தான் இருக்க போகிறீர்கள்.." என்று கூறுகிறார். அதே வீடியோவில் ஒருவர், நடிகையின் கார் டிரைவர் அவரது அம்மா மீது மோதிவிட்டதாகவும், அதுகுறித்து கேட்டபோது தனது அம்மாவை ரவீணா டாண்டனின் கார் டிரைவர் தாக்கியதாக கூறுகிறார்.
சமூக வலைத்தளங்களில் இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது ரவீணா டாண்டன் விவகாரம் குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவத்தின் போது ரவீணா டாண்டன் கார் யார் மீதும் இடிக்காமல் செல்வது போன்ற வீடியோ காட்சியும் எக்ஸ் தளத்தில் பரவி வருகிறது. ரவீணா டாண்டன் இந்த விவகாரம் குறித்து தற்போது வரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications