இந்துக்கள் மீது விஷத்தை கக்கிய.. 'IC 814: தி காந்தஹார் ஹைஜாக்'.. பாலிவுட்டின் திட்டமிட்ட சதி?

Subscribe to Oneindia Tamil

மும்பை: உலகின் மிகப்பெரிய திரைப்படத் துறையான பாலிவுட் நீண்ட காலமாக இந்தியாவின் பல்வேறு கதைகள் மற்றும் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்து வருகிறது. இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக பாலிவுட் துறை உள்ளது... இப்படிப்பட்ட சினிமாவில் கடந்த சில காலங்களாக இந்து வெறுப்பு அரசியல் தீவிரமாக திணிக்கப்பட்டு வருகிறது. இந்து மதம் மற்றும் கலாச்சாரம் குறித்து விமர்சனங்களை வைக்கும் வகையில், அவமதிக்கும் வகையில் பாலிவுட் துறை படங்களை வெளியிட்டு வருகிறது. இந்து கதாபாத்திரங்கள், குறியீடுகள் மற்றும் மரபுகளை தவறாக சித்தரிக்கும் போக்கும் பாலிவுட் துறையில் அதிகரித்து வருகிறது.

பாலிவுட்டில் இந்து கலாச்சாரத்தை இழிவான முறையில் சித்தரிப்பது புதிதல்ல, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இத்தகைய தீவிரம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. பிகே (2014) மற்றும் ஓ மை காட் (2012) போன்ற படங்கள் மற்ற மதங்களை அதன் கலாச்சாரங்களை பற்றி பேசாமல்.. வெறுமனே இந்து மத கலாச்சாரத்தை மட்டும் கடுமையாக விமர்சனம் மற்றும் கேலி செய்தது. அந்த வகையில் இந்த லிஸ்டில் 'IC 814: தி காந்தஹார் ஹைஜாக்' படம் இணைந்துள்ளது.

cinema

1999 ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதை வைத்து எடுக்கப்பட்ட சமீபத்திய திரைப்படமான 'IC 814: The Kandahar Hijack' பாலிவுட்டின் இந்து விரோத போக்குக்கு சமீபத்திய உதாரணம். இந்த விமான கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் மதத்தை இந்துவாக மாற்றி தவறாக சித்தரித்ததற்காக படம் மீது கடுமையான விமர்சனங்களை மக்கள் வைத்து வருகின்றனர். தீவிரவாதிகளுக்கு வேண்டுமென்று இந்து பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு பின் என்ன காரணம்.. ஏன் இப்படி கங்கணம் கட்டிக்கொண்டு இந்து மதத்தை உள்ளே கொண்டு வந்து விமர்சனம் செய்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

IC 814 திரைப்பட சர்ச்சை:

IC 814 இன் நிஜ வாழ்க்கை கடத்தல்காரர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள். ஆனால் படம் இந்த கதாபாத்திரங்களுக்கு இந்து பெயர்களை வைத்துள்ளது. நிஜத்தில் கடத்தியவர்கள் பெயர்களை வைக்காமல் இப்படி இந்து மத பெயர் வைத்தது ஏன்? இந்த முடிவு வரலாற்று உண்மைகளை திரித்து இந்து சமூகத்தை இழிவுபடுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சித்தரிப்புகள் வரலாற்றை தவறாக சித்தரிப்பது மட்டுமல்லாமல், இந்துக்களை அநியாயமாக இழிவுபடுத்தும் வகையிலும் அமைந்து உள்ளது.

IC 814 படம் மட்டுமல்ல.. பயங்கரவாதிகளுக்கு இந்து பெயர்களைப் பயன்படுத்துவது ஒரு இதற்கு முன்பும் பாலிவுட்டில் அடிக்கடி நடக்கும் சம்பவமே! பாலிவுட்டில் இந்து சின்னங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இந்து கடவுள் உருவங்கள் மீது அடிக்கடி விமர்சனங்கள், கருத்துக்களை படங்களில் வைத்து வருகின்றனர். இந்து மத எதிர்ப்பு கருத்துக்களோடு.. இந்துக்களை கடுமையாக விமர்சிக்கும் வகையில், பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இந்த படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடைசியில் கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகு;.. சமீபத்தில் அரசு அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, ​​தேசத்தின் உணர்வுகளை உணர்ந்து செயல்படுவது குறித்து நெட்ஃபிக்ஸ் இந்திய அரசுக்கு உறுதியளித்துள்ளது. அதெல்லாம் சரி.. இப்போது கண்கெட்ட பின் சூரிய உதயம் செய்வது போதுமா? பாலிவுட் இந்த இந்து விரோத போக்கில் இருந்து வெளியே வர வேண்டமா?

சினிமாவில் உச்சம் எடுக்கும் இந்து விரோத போக்கு:

பாலிவுட் படங்களில் இந்துக்களை வில்லன்களாக அல்லது தீவிரவாதிகளாக தொடர்ந்து சித்தரிப்பது .. சாதாரண விஷயம் அல்ல.. இது மக்களிடையே பெரிய அளவில் சமூக தாக்கங்களைக் கொண்டுள்ளது. தங்கள் மத நம்பிக்கை நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுவதாக இந்துக்கள் கலங்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற மக்களிடம் இருந்து இந்து மக்கள் அந்நியப்பட இது வழி வகுக்கிறது. இந்துக்கள் மீது பிற மக்களுக்கு வெறுப்பு உணர்வை வளர்க்கிறது. உலக நாடுகள் இந்துக்கள் மீது வைத்துள்ள பிம்பத்தை உடைத்து.. அதை தவறாக மாற்ற பார்க்கிறது. பத்மாவத் (2018) போன்ற திரைப்படங்களும் இந்து ராஜ்புத் வீரர்களை தவறாக சித்தரித்ததற்காக விமர்சனங்களை எதிர்கொண்டன. முக்கியமாக சில பாலிவுட் படங்கள்.. இந்து கதாநாயகர்களின் வீரம் மற்றும் கண்ணியத்தை குறைத்து காட்டி.. எதிரியை உயர்த்தி காட்சி காட்சிகளை வைத்துள்ளன.

இதேபோல், பிரபலமான வலைத் தொடரான ​​Sacred Games (2018) இல், திரிசூலம் மற்றும் பகவத் கீதை போன்ற இந்து சின்னங்கள் அவமரியாதைக்கு உட்படுத்தப்பட்டன. இந்து மரபுகளை மட்டும் தேர்ந்தெடுத்து குறி வைப்பது.. மற்ற மதங்களை விமர்சிப்பதைத் தவிர்த்து.. இந்துக்களை மட்டுமே குறி வைப்பது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டியது. இது படைப்பு சுதந்திரம் என்று சொல்லிவிட்டு தப்ப முடியாது.. அனைத்து சமூகங்களின் உணர்வுகளையும் மதிக்கும் பொறுப்பு. அதை பாலிவுட் உணர்ந்துகொள்ள வேண்டும்!

முடிவுரை: உண்மையும், நேர்மையும் தேவை!

பாலிவுட்டில் இந்து கதாபாத்திரங்கள் மற்றும் கலாச்சாரத்தின் சித்தரிப்புக்கு இன்னும் முறையாக கையாளப்பட வேண்டும். உண்மைகளை நேர்மையாக வெளிப்படுத்த வேண்டும். எந்தவொரு மதத்திலும் உள்ள தவறான நடைமுறைகளை விமர்சிப்பதும் கேள்வி கேட்பதும் முக்கியம் என்றாலும், அது மரியாதையுடனும் நியாயத்துடனும் செய்யப்பட வேண்டும். 'IC 814: The Kandahar Hijack' போன்ற படங்களில் காணப்படுவது போல், இந்து மதத்தை வேண்டுமென்றே குறி வைக்கும் போக்கு.. நிறுத்தப்பட வேண்டும். இந்துக்களை மட்டும் "டார்கெட்" செய்து.. அவர்கள் மீது சமூக அழுத்தங்களை திணித்து.. இந்துக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துகளை கைவிட வேண்டும்.

பாலிவுட் உண்மையிலேயே இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்க, அனைத்து சமூகங்களும் அவர்களுக்குத் உரிய கண்ணியத்துடனும் மரியாதையுடனும் சித்தரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சினிமா தொழில்துறையானது சாதாரண ஒன்றல்ல.. இது பொதுமக்கள் இடையே ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கைக் கொண்டுள்ளது. அந்த சக்தியின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லை நான் இந்துக்களை எதிர்த்தே படம் எடுப்பேன் என்றால்.. மக்கள் பாலிவுட்டை புறக்கணிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. பல ஆண்டுகளாக இந்துக்களை வேண்டுமென்றே இழிவுபடுத்த முயற்சி செய்த பாலிவுட்டின் பல திரைப்படங்களில் சில திரைப்படங்களையும் பின்வரும் ட்வீட் பட்டியலிடுகிறது. இதை எல்லாம் பார்த்த பின் நீங்களே முடிவு செய்யுங்கள்.. பாலிவுட்டில் தற்செயலாக இப்படி கதை எழுதுகிறார்களா? இல்லை திட்டமிட்டு எழுதுகிறார்களா? என்று!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+