Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bulli Bai: ஆப்பில் ஏலம் விடப்பட்ட இஸ்லாமிய பெண்கள்.. பின்னணியில் 21 வயது மாஸ்டர் மைண்டா? திருப்பம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: Bulli Bai என்ற செயலியில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் ஏலம் விடப்பட்ட நிலையில் அதற்கு பின் இருக்கும் 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால் இந்த செயலிக்கு பின் வேறு பெரிய கும்பல் இருக்கும் வாய்ப்பு உள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்தான் Sulli Deals என்ற செயலி முடக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி ஏலம் விடும் Bulli Bai என்ற செயலி உருவாக்கப்பட்டு சர்ச்சையாகி உள்ளது. வடஇந்தியாவில் இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தை பிரயோகம் Sulli என்பது ஆகும்.

இதை அடிப்படையாக வைத்து முதல் ஆப் உருவாக்கப்பட்டது. அது தடை செய்யப்பட்டதும் Bulli Bai என்ற செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இது இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை ஏலம் விட்டு கமெண்ட் செய்யும் செயலி ஆகும்.

Bulli Bai செயலி

Bulli Bai செயலி

இஸ்லாமிய பெண்களை அவமதிக்கும் வகையில் அவர்களை ஏலம் விடுவது போல அவர்களின் புகைப்படங்களை பகிரும் தளம்தான் இந்த Bulli Bai செயலி. பொதுவாக இந்த செயலியில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படம் பதிவேற்றப்படும். யூசர் ஒருவர் இதை லாக்இன் செய்கிறார் என்றால், அவருக்கு ஒரு இஸ்லாமிய பெண்ணின் புகைப்படம் திரையில் தோன்றும். இவர்தான் உங்களின் சுல்லி.. இவரை ஏலம் விடுங்கள் என்று கூறும். அந்த பெண்ணை அதே ஆப்பில் இருக்கும் மற்ற யூசர்களுக்கு இவர் ஏலம் விட வேண்டும்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? இதைத்தான் முதலில் Sulli Deals என்ற பெயரிலும் இப்போது Bulli Bai என்ற பெயரிலும் வக்கிர கும்பல் ஒன்று நடத்தி உள்ளது. கடந்த வருடம் ஜூலை 4ம் தேதி இந்த Sulli Deals செயலி கண்டுபிடிக்கப்பட்டு அது இணையம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஆப் தடை செய்யப்பட்டாலும் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த முறை Bulli Bai செயலி கண்டுபிடிக்கப்பட்டு அது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

வழக்கு

வழக்கு

இந்த நிலையில் டெல்லியிலும், உத்தர பிரதேசத்திலும் Bulli Bai செயலி தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது. போலீசார் சார்பில் இதில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த ஆப்பை நடத்தும் portal ஒரு பக்கம் தடை செய்யப்பட்டது. அதேபோல் இந்த செயலி செயல்படும் github தளத்திற்கும் அந்த ஆப்பை உருவாக்கியது யார் என்று கேட்டு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் நேற்று மாலை வரை இதில் கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத காரணத்தால் பலர் இதை கேள்வி எழுப்பி இருந்தனர்.

Sulli Deals

Sulli Deals

எப்ஐஆர் மட்டும் பதியப்பட்டால் போதாது. கைது நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இனிமேலும் இப்படியே லேசான நடவடிக்கைகளை எடுக்க கூடாது என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கை மும்பை போலீஸ் ஒரு பக்கம் தீவிரமாக விசாரித்து வந்தது. மும்பை போலீஸ் சார்பாக அந்த Bulli Bai செயலியின் ட்விட்டர் பக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அதன் ஐபி அட்ரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

21 வயது மாணவர்

21 வயது மாணவர்

இந்த ஐபி அட்ரஸ் பெங்களூரை சேர்ந்தது. இதையடுத்து உடனடியாக பெங்களூர் சென்ற போலீசார் இந்த ஆப்பை நடத்தி வந்த நபர்களில் ஒருவரை கைது செய்தனர். அந்த நபர் 21 வயதே ஆன கல்லூரி மாணவர். இவர் பெங்களூரில் சிவில் என்ஜினியரிங் படித்து வருகிறார். இவரும் ஆப்பை நடத்தியவர்களில் ஒருவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

பெங்களூர் மாணவர்

பெங்களூர் மாணவர்

இவரின் பெயரை வெளியிட்டால் அது சிக்கலாகிவிடும். விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர் மட்டும் தனி ஆளாக இருந்து இந்த செயலியை நடத்தவில்லை. இவர் பின் வேறு கும்பல் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். எல்லா குற்றவாளிகளையும் விரைவில் கண்டுபிடிப்போம். விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெரிய கும்பல்

பெரிய கும்பல்

பெங்களூரில் இருந்து மும்பைக்கு இவரை அழைத்து சென்றுள்ளனர். இவரிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்பாக மேலும் சில கைதுகள் நடக்கும் என்று கூறப்படுகிறது. மும்பை போலீஸ் தரப்பு இது குறித்து தெரிவித்த கருத்தில், ஒருவரை கைது செய்து இருக்கிறோம். ஆனால் அவருக்கு பின் நிறைய பேர் இருக்க வாய்ப்பு உள்ளது. பல நாட்கள் திட்டமிட்டு இப்படி அவர்கள் செயலியை நடத்தி இருக்கலாம். சில முக்கிய காரணங்களுக்காக அவரின் பெயரை வெளியிட முடியாது என்று போலீஸ் தரப்பில் தெரிவித்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+