ஜிம்மில் நடனமாடும் போதே.. திடீரென துடிதுடித்து சரிந்து உயிரிழந்த பிரபல தொழில் அதிபர்.. ஷாக் வீடியோ
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஜிம்மில் நடனமாடிக்கொண்டிருந்த தொழில் அதிபர் ஒருவர் மாரடைப்பால் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாட்டில் மாரடைப்பு ஏற்படுவது தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. முன்பு எல்லாம் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு அதிகம் ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது இளைஞர்கள் கூட அடிக்கடி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

இளைஞர்கள் மட்டும் இல்லை, ஏன் குழந்தைகளுக்குக் கூட மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வாழ்க்கை மற்றும் உணவு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. பாட்டு பாடிக்கொண்டிருக்கும் போது, டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் போது, கபடி விளையாடும் போது என திடீரென சுருண்டு விழுந்து இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகின்றன.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தொழில் அதிபர் ஒருவர் ஜிம்மில் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டிருக்கும் போது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு 6 பேர் பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் திடீரென பாடலுக்கு ஆடாமல் எதையோ பறிகொடுத்தது போல 2 செகண்ட் நிற்கிறார். அடுத்த சில நொடிகளில் அப்படியே தரையில் சுருண்டு விழுகிறார்.
உடனடியாக அவரை தண்ணீரை தெளித்து எழுப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் அவர் அசைவின்றி கிடக்கிறார். இதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளி வந்தது. விசாரணையில் உயிரிழந்தது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த தொழில் அதிபர் என்பது தெரியவந்தது. நாக்பூர் மாவட்டம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஜிம்மில் ஜிம்பா நடனம் ஆடியபோது தான் உயிரிழந்து இருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக நெட்டிசன்களுகும் கருத்து தெரிவித்துள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், " 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஜிம்மிற்குச் செல்வதற்கு முன்... அதிக ஆபத்துள்ள நபர்களைக் கண்டறிய சரியான அறிகுறி வரையறுக்கப்பட்ட TMT செய்து கொள்ள வேண்டும். எந்தவொரு விளையாட்டு நடவடிக்கையிலும் இது கட்டாயமாக்கப்பட வேண்டும். இது போன்ற சோகமான நிகழ்வுகளை முற்றிலுமாகத் தடுக்க முடியாது என்றாலும் இது கணிசமாகக் குறைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மாரடைப்பிற்கு சொல்ல முடியாத மார்பு வலி தான் மிகவும் முக்கிய அறிகுறியாக உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 68 சதவீதம் பேருக்கு மார்பு வலி தான் முக்கிய அறிகுறியாக இருந்துள்ளது. நெஞ்சு கனமாகத் தோன்றுவது, இதயம் படபடப்பது, மூச்சுத் திணறல், மார்பில் எரியும் உணர்வு, அசாதாரண சோர்வு, தூக்கப் பிரச்சனைகள் போன்றவையே மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
பொதுவாக இதய தமனிகளில் ஏற்படும் அடைப்புகள் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. இதில் பகுதி அடைப்பு இருப்போருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த அறிகுறிகள் தென்படும். அதேநேரம் தமனியில் முழு அடைப்பு இருந்தால் ஒரு மாதம் அல்லது அதற்கும் முன்பு கூட அறிகுறிகள் ஏற்படும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications