உத்தவ் vs ஷிண்டே.. மகாராஷ்டிராவில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்.. தீவிர வாக்குப்பதிவு

இந்த இடைத்தேர்தலின் வெற்றி/தோல்விகள் எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதே ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவின் கஸ்பா பெத் மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் தொடங்கியுள்ளது. காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் தேர்தலில் மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

கஸ்பா பெத் தொகுதி எம்எல்ஏ முக்தா திலக் மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் தொகுதி எம்எல்ஏ லட்சுமண் ஜக்தாப் ஆகியோர் காலமானதைத் தொடர்ந்து இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தரப்பு மற்றும் உத்தவ் தாக்ரே தரப்பு என இரண்டாக பிரிந்துள்ளதால் இருதரப்பினரும் கட்சியின் சின்னமான 'வில் அம்புக்கு' சண்டையிட்டு வந்தனர். இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த சின்னத்தில் எந்த தரப்பினர் நிற்பது என்று குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து கடந்த 19ம் தேதி இந்த சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மறுபுறம் இடைத்தேர்தல் வரை உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனாவுக்கு 'சுடர் ஜோதி' சின்னம் ஒதுக்கப்படுவதாகவும் கூறியது.

தேர்தல்

தேர்தல்

இதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், என்சிபி தலைவர் சரத் பவார், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், என்சிபி தலைவர் அஜித் பவார், சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் மேற்குறிப்பிட்ட இரண்டு தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். இரண்டு தினங்களுக்கு முன்னர் பிரசாரம் முடிவடைந்த நிலையில், இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவானது மாலை 5 மணியளவில் முடிவடைகிறது. இரண்டு தொகுதிகளும் பதற்றமானவை என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர்கள்

வாக்காளர்கள்

கஸ்பா மற்றும் சின்ச்வாட் தொகுதிகளில் சுமார் 510 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கஸ்பா தொகுதியில் மட்டும் 2,75,428 வாக்காளர்கள் இருக்கின்றனர். சின்ச்வாட் தொகுதியில் 5,68,954 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். வாக்குச்சாவடியின் 100 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. புனே நகரில் அமைந்துள்ள கஸ்பா தொகுதியில் பாஜக ஆதரவுடன் ஹேமந்த் ரசானே போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆதரவுடன் காங்கிரஸின் ரவீந்திர தங்கேகர் களமிறங்கியுள்ளார்.

உத்தவ் தாக்ரே தரப்பு

உத்தவ் தாக்ரே தரப்பு

இதேபோல சின்ச்வாட் தொகுதியில் பாஜகவின் அஷ்வினி ஜக்தாப் களம் இறங்கியுள்ள நிலையில் அவருக்கு எதிராக தேசியவாத காங்கிரஸின் நானா கேட் போட்டியிட்டுள்ளார். இந்த தேர்தலில் சிவசேனாவின் உத்தவ் தாக்ரே அணி போட்டியிடவில்லை. ஆனால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தொடர் பிரசாரத்தை ஆதித்யா தாக்ரே மேற்கொண்டிருந்தார். இந்த இடைத்தேர்தலில் அதிக அளவில் பணம் விநியோகிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். கஸ்பா தொகுதியில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினார்.

போராட்டம்

போராட்டம்

சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறிய நிலையில், அவர் இந்த போராட்டத்தை கைவிட்டுள்ளார். இக்குற்றச்சாட்டுக்கு துணை முதலமை்ச்சர் தேவிந்திர ஃபட்னாவிஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், "நாங்கள் தோற்கும் நிலை வந்தாலும் கூட இதுபோன்று பண விநியோகத்தில் ஈடுபட மாட்டோம். தோல்வி பயத்தில் இருப்பவர்கள்தான் இதுபோன்ற போலியான குற்றச்சாட்டை முன்வைப்பார்கள்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+