பாக்., வங்கதேச அகதிகளுக்கு ஒரு நியாயம், இலங்கை தமிழர்களுக்கு ஒரு நியாயமா.. சரத் பவார் கேள்வி
மும்பை: பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் போது இலங்கை தமிழர்களுக்கு இல்லாதது ஏன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்ஸி, ஜோரோஸ்டிரியன்கள் உள்ளிட்டோர் 2015-ஆம் ஆண்டு முன்னர் இந்தியாவில் அகதிகளாக வந்திருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் அந்த திருத்தம்.
இந்த திருத்தத்தில் முஸ்லீம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யவில்லை.

புனேவில்
இதை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிறுபான்மையினர்
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புனேவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு ஆகியவை நாடு சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்பும் உத்திகள் ஆகும்.

இலங்கைத் தமிழர்கள்
இந்த சட்டத்தை சிறுபான்மையினர் மட்டும் எதிர்க்கவில்லை.
நாட்டின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்துக்காக கவலைப்படுவோரும் இதை எதிர்க்கின்றனர்.

தமிழர்கள்
வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படுவது ஏன்? இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications