மகாராஷ்டிராவில் எந்த சாதியினர் பாஜகவை ஆதரிக்கிறார்கள்? காங்கிரஸை ஆதரிப்பது யார்! புதிய எக்ஸிட் போல்
மும்பை: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் தொடர்பாக ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் சாதி வாரியாகவும் வயது வாரியாகவும் எந்தக் கட்சிக்கு எத்தனை சதவிகித ஆதரவு இருக்கிறது என்பது குறித்த முக்கிய டேட்டா வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நேற்று நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது. அதன்படி ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

தாழ்த்தப்பட்ட பிரிவினர்: அதில் சாதி வாரியான டேட்டாவும் வெளியாகியுள்ளது. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களில் 34% பாஜக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் நிலையில், காங்கிரஸ் கூட்டணிக்கு 40% ஆதரவளித்துள்ளனர். விபிஏ எனப்படும் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சிக்கு 14% பேர் ஆதரவு அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிக்கு 12% வாக்களித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
பழங்குடியினர் என்று பார்க்கும் போது பாஜக கூட்டணிக்கு 49% பேரும், காங்கிரஸ் கூட்டணிக்கு 37% பேரும் ஆதரவளித்துள்ளனர். விபிஏவுக்கு 2% ஆதரவும் கட்சிகளுக்கு 12% ஆதரவும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. விமுக்த ஜாதி மற்றும் நாடோடி பழங்குடியினர் பிரிவைப் பொறுத்தவரை பாஜக கூட்டணிக்கு 54% பேரும், காங்கிரஸ் கூட்டணிக்கு 30% ஆதரவளித்துள்ளனர். விபிஏவுக்கு 2% பேரும், இதர கட்சிகளுக்கு 14% பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.
இஸ்லாமியர்கள்: இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை பாஜகவுக்கு 4% மட்டுமே வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். 79% காங்கிரஸ் கூட்டணிக்கும், விபிஏ கூட்டணிக்கு 2% பேரும் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதர கட்சிக்கு 15% வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல குன்பி சாதியினர் பாஜக கூட்டணிக்கு 53%, காங்கிரஸ் கூட்டணிக்கு 54% பேரும், விபிஏவுக்கு 1%, இதர கட்சிக்கு 12% பேரும் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களில் பாஜக கூட்டணிக்கு 64%, காங்கிரஸ் கூட்டணிக்கு 25% பேரும், விபிஏவுக்கு 1%, இதர கட்சிக்கு 10% பேரும் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மராத்தா பிரிவினரைப் பொறுத்தவரை பாஜக கூட்டணிக்கு 48%, காங்கிரஸ் கூட்டணிக்கு 40% பேரும், விபிஏவுக்கு 1%, இதர கட்சிக்கு 11% பேரும் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பொதுப்பிரிவினர் என்று வரும் போது பாஜக கூட்டணிக்கு 68%, காங்கிரஸ் கூட்டணிக்கு 22% பேரும், இதர கட்சிக்கு 10% பேரும் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதர சாதியினர்களில் பாஜக கூட்டணிக்கு 57%, காங்கிரஸ் கூட்டணிக்கு 28% பேரும், விபிஏவுக்கு 1%, இதர கட்சிக்கு 14% பேரும் வாக்களித்துள்ளதாகக் கூறியிருப்பதாக ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
வயது வாரியாக: அதேபோல வயது வாரியாகவும் டேட்டா வெளியிடப்பட்டுள்ளது. அதில் 18- 25 வயதானவர்களில் பாஜக கூட்டணிக்கு 44%, காங்கிரஸ் கூட்டணிக்கு 39% பேரும், விபிஏவுக்கு 3%, இதர கட்சிக்கு 14% பேரும் வாக்களித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 26- 35 வயதினர் என வரும் போது பாஜக கூட்டணிக்கு 47%, காங்கிரஸ் கூட்டணிக்கு 37% பேரும், விபிஏவுக்கு 3%, இதர கட்சிக்கு 13% பேரும் வாக்களித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
36- 50 வயதானவர்கள் என வரும் போது பாஜக கூட்டணிக்கு 50%, காங்கிரஸ் கூட்டணிக்கு 35%, விபிஏவுக்கு 2%, இதர கட்சிக்கு 13% பேரும் வாக்களித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 51- 60 வயதானவர்களில் பாஜக கூட்டணிக்கு 49%, காங்கிரஸ் கூட்டணிக்கு 38% பேரும், விபிஏவுக்கு 3%, இதர கட்சிக்கு 3% பேரும் வாக்களித்துள்ளதாக ஆக்சிஸ் மை இந்தியா சர்வேயில் கூறப்பட்டுள்ளது. 61 வயதைத் தாண்டியவர்கள் என வரும் போது பாஜக கூட்டணிக்கு 47%, காங்கிரஸ் கூட்டணிக்கு 40% பேரும், விபிஏவுக்கு 2%, இதர கட்சிக்கு 1% பேரும் வாக்களித்துள்ளதாக ஆக்சிஸ் மை இந்தியா சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications