சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்.. நடிகைக்கு எந்த தொடர்பும் இல்லை.. நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்த சிபிஐ

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கும், நடிகை ரியா சக்கரபோர்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலை என்பதை சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள சிபிஐ, மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கை போ சே, சிச்சோரே, தோனியின் சுயசரிதை படமான எம்எஸ் தோனி உள்ளிட்ட படங்களின் மூலமாக தமிழ்நாட்டிலும் அதிக பிரபலமடைந்தவர். இவர் 2020ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Sushant Singh Rajput Rhea Chakborty CBI

இந்த இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் வேகமாக வளர்ந்து வரும் நடிகரான இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீரென தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று பலரும் கேள்வியை எழுப்பினர். இதனிடையே சுஷாந்த் சிங் ராஜ்புத் உடற்கூராய்வு நடத்திய குழுவில் இருந்த ரூப்குமார் ஷா, சுஷாந்த் சிங் ராஜ்புத் உடலில் காயங்கள் இருந்தது என்று அதிர்ச்சியை கிளப்பினார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு சிபிஐ வசம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை தரப்பில் நடிகை ரியா சக்கரபோர்டி மீது குற்றம்சாட்டப்பட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் ரியா சக்கரபோர்டி இருவரும் காதல் உறவில் இருந்து பிரிந்தனர். இதனால் நடிகை ரியா சக்கரபோர்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் சிபிஐ தரப்பில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலை என்பதை சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்திருக்கலாம்.

அதேபோல் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் நடிகை சியா சக்கரபோர்டிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எந்த தொடர்பும் கிடையாது. சோஷியல் மீடியாவில் பேசப்பட்ட அனைத்து தகவல்களும் தவறானவை. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு பின் பாலிவுட் சினிமாவை ரசிகர்கள் ஒதுக்க தொடங்கினர். பாலிவுட் மாஃபியா என்று சொல்லப்படும் சிலரே சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு காரணம் என்றும், நெப்போடிஸத்தை வளர்க்கும் அவர்களால் சுஷாந்த் சிங் ராஜ்புத்-க்கு அழுத்தம் ஏற்பட்டதாக ரசிகர்கள் கடுமையாக விவாதித்து வந்தனர். தற்போது சிபிஐ அறிக்கையால், அவரின் மரணம் மீண்டும் விவாத பொருளாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+