ரூ.800 கோடி மோசடி.. டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு!
மும்பை: மும்பையில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக துறைமுகமான ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சுமார் ரூ.800 கோடி அளவுக்கு மோசடி மற்றும் ஊழல் நடந்ததாகக் கூறி, சிபிஐ கடந்த 2024ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. தற்போது இந்த வழக்கில் டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் (TCE) நிறுவனத்தை இணைத்திருக்கிறது.
கப்பல்கள் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் எளிதாக வந்து செல்லவும், பெரிய சரக்குக் கப்பல்களைக் கையாளவும் துறைமுகத்தின் ஆழம் பராமரிக்கப்படுவது அவசியம். அதாவது துறைமுக பகுதியில் தொடர்ந்து கடல் ஆழப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இந்தப் பணிகள் அதிக செலவு பிடிக்கும் மற்றும் பெரிய ஒப்பந்தங்களைக் கொண்டவை.

இந்த திட்டத்தின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், ஒப்பந்த நடைமுறைகள், தரம் மற்றும் செலவினக் கட்டுப்பாடு போன்ற விஷயங்களில் ஆலோசனை வழங்கி, மேற்பார்வையிட வேண்டும் என்று டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டது. ஆனால், இதில் பெரிய முறைகேடுகள் மற்றும் ரூ.800 கோடி அளவுக்கு ஊழல் நடத்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 13 ம் இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.
இப்போது இந்த வழக்கில் டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்நிறுவனம், துறைமுக அதிகாரிகளுடன் இணைந்து, குற்றச் சதி செய்துள்ளது. இதன் மூலம், ஆழப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தங்களை சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக வழங்கியுள்ளனர். இதனால் துறைமுகத்திற்கு ரூ.800 கோடி என பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்திருக்கிறது. எனவேதான் டாடா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
அதேபோல சர்வதேச கடல்சார் பொறியியல் நிறுவனமான, 'மெஸ்ஸர்ஸ் போஸ்காலிஸ் ஸ்மிட்' (M/s Boskalis Smit)நிறுவனமும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
முதல் கட்டம்: 2010 முதல் 2014 வரை
இரண்டாம் கட்டம்: 2012 முதல் 2019 வரை
என இரண்டு கட்டங்களாக துறைமுகம் ஆழப்படுத்தும் பணிகள் நடந்தன. இந்த காலத்தில்தான் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ கூறுகிறது. இதனை தி வயர் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே ஏர் இந்தியா விபத்தில், டாடா நிறுவனத்தின் பெயர் அடிப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், தற்போது துறைமுக ஊழல் வழக்கிலும் TCE பெயர் அடிப்பட்டிருப்பது, பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications