முகேஷ் அம்பானி வீடு அருகே.. வெடிகுண்டுடன் "ஸ்கார்பியோ.." சுற்றி வளைத்த போலீஸ்.. பரபர சிசிடிவி காட்சி
மும்பை: மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டுக்கு வெளியே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Recommended Video
தெற்கு மும்பையில் கார்மைக்கேல் ரோடு பகுதியில் உள்ளது முகேஷ் அம்பானி வீடு. ரிலையன்ஸ் நிறுவனங்களில் தலைவரான அம்பானி, இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவர்.
இவரது வீட்டை சுற்றி எப்போதும் தனியார் பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பது வழக்கம்.

வீட்டுக்கு பக்கத்தில் ஸ்கார்பியோ
இந்த நிலையில்தான் நேற்று மாலை, ஸ்கார்ப்பியோ கார் ஒன்று கேட்பாரின்றி முகேஷ் அம்பானி வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அம்பானி வீட்டில் இருந்து வெறும் 500 மீட்டர் தூரத்தில் அந்த கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜெலட்டின் குச்சிகள்
போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது உள்ளே வெடிகுண்டுகள் இருப்பதுபோல தெரிந்தது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளை வைத்து சோதனை செய்தனர். அப்போது காருக்கு உள்ளே ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தூக்கிச் செல்லப்பட்டது
இதையடுத்து அந்த கார் மற்றொரு வாகனத்தில் இரும்பு சங்கிலி மூலமாக இணைக்கப்பட்டு, அப்படியே நகர்த்தி செல்லப்பட்டது. இரண்டு டயர்கள் மேலே தூக்கிக் கொண்டிருக்க, இரண்டு டயர்களை கொண்டு காரை இழுத்துச் சென்றனர் போலீசார். இந்த சம்பவங்கள் அனைத்தும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
|
சிசிடிவி காட்சிகள்
ஸ்கார்பியோ கார் நம்பர் பிளேட் பற்றி போலீசார் ஆய்வு நடத்தியபோது அது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு காரின் நம்பர் பிளேட் என்பது தெரியவந்தது. ஆனால் ஜாகுவார் வகை சொகுசு கார் நம்பர் பிளேட், ஸ்கார்பியோ காரில் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் சில போலி நம்பர் பிளேட்டுகள் காருக்குள்ளே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காருக்குள் இருந்து ஒரு மர்ம கடிதம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது சினிமாவில் வரக்கூடிய காட்சிகளை போல இருக்கிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications