உச்சத்தில் கொரோனா... தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க... மத்திய அரசு அதிரடி திட்டம்
மும்பை: கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மகாராஷ்டிராவிலுள்ள ஹாப்கின் இன்ஸ்டிடியூட்டில் கோவாக்சின் தடுப்பூசியின் உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் இந்த அலை மிக மோசமாக உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தினசரி வைரஸ் பாதிப்பு இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக டிக்கா உத்சவ் என்ற தடுப்பூசி திருவிழாவும் நடத்தப்பட்டது.

கோவாக்சின் தடுப்பூசி
இருப்பினும், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தன. இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள ஹாப்கின் இன்ஸ்டிடியூட்டில் கோவாக்சின் தடுப்பூசியின் உற்பத்தியைத் தொடங்க அனுமதி அளிக்குமாறு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தர்.

உற்பத்தியை தொடங்க அனுமதி
அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, ஹாப்கின் இன்ஸ்டிடியூட்டில் கோவாக்சின் தடுப்பூசியின் உற்பத்தியைத் தொடங்க அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், இந்த நடவடிக்கை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

உத்தவ் தாக்கரே நன்றி
தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க அனுமதி அளித்ததற்கு மத்திய அரசுக்கு உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் நிறுவனம் இதற்கான தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ளும். இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்த பிரதமருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு
இந்தியாவிலேயே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு இதுவரை 36.39 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு அங்கு 60 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், தினசரி கொரோனா உயிரிழப்பு 349ஆகப் பதிவாகியுள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் 6.20 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications