ட்விஸ்ட்.. கரப்பான் பூச்சி கட்சிக்கு திரண்ட உள்ளூர் மக்கள்.. போராட்டத்திற்கு எதிராக போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சி மும்பையின் சிவாஜி பார்க்கில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாக மக்கள் திரள தொடங்கியுள்ள நிலையில், மற்றொருபுறம் உள்ளூர் மக்கள் சிலர் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு எதிராகவும் போராட்டத்தில் இறங்கியுள்லனர்.

கடந்த இரு வாரமாகவே தேர்தல் ஆணையம் குறித்த சர்ச்சையாக பெரிதாக வெடித்துள்ளது. எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் பிற தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபனை தெரிவித்தும் கூட தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தார் என்பதே பிரதான குற்றச்சாட்டு. இந்த விவகாரம் நாடு முழுக்க பெரிதாக வெடித்துள்ளது.

Cockroach Janata Party protest Mumbai election commission

தலைமை தேர்தல் ஆணையர்

இதற்கிடையே ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும், எஸ்ஐஆர் தொடர்பான முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்துகிறது. இதையடுத்து போராட்டம் நடைபெறும் சிவாஜி பார்க் மற்றும் தாதர் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய நுழைவுப் பகுதிகளில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள போதிலும், சிவாஜி பார்க் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

பிரபலங்கள்

மேலும், பல பிரபலங்களும் கூட இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பிரபல நடிகர் நசீருதீன் ஷாவும் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவை சந்தித்து போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவை அபிஜித் தீப்கே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.. எஸ்ஐஆருக்கு முந்தைய வாக்காளர் பட்டியலை வைத்து இனி வரும் காலங்களில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்திற்கு மக்கள் அதிகளவில் திரள்வதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் மக்கள்

இது ஒரு பக்கம் இருக்க சிவாஜி பார்க் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்கள் கரப்பான் பூச்சி போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடிக்கடி நடைபெறும் போராட்டங்களால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கையும், பிஸ்னஸும் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். போராட்டங்களின்போது தங்கள் கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல மகாராஷ்டிராவின் லத்தூரிலும் கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி சவுக்கில் திரண்ட மாணவர்கள், நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தை தீப்கே கைவிட்டுவிட்டு மற்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதாக குற்றம்சாட்டினர். போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், தீப்கேவிடம் கேள்வி எழுப்பும் வகையிலான பதாகைகளையும் வைத்திருந்தனர்.

போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பிறகு தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு பெற்றுத்தருவது, எதிர்காலத்தில் இதுபோன்ற லீக் நடைபெறாமல் தடுப்பது தொடர்பாக அரசு அளித்த உறுதிமொழிகள் குறித்து தீப்கே நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டினார். மேலும், கடந்த ஒன்றரை மாதமாக தீப்கே இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு தெளிவான பதில் அளிக்காமல், மற்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதாவது மும்பையில் இப்போது வினோதமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. மக்கள் கூட்டமாக போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். மற்றொரு புறம் உள்ளூர் மக்களும் மாணவர்களும் கரப்பான் பூச்சி கட்சிக்கு எதிராகவே போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+