மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்ப்ரைஸ்.. ராகுல் காந்தி மட்டுமல்ல, சிவ சேனாவும் சரத் பவாருக்கு ஆதரவு.. பழிவாங்குவதாக குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    விசாரிங்க.. வான்டடாக அமலாக்கத்துறை ஆபீஸ் போகும் சரத் பவார்.. வரக்கூடாது.. அதிகாரிகள் கறார்.. பதற்றம்-வீடியோ

    மும்பை: நிதிமோசடி முறைகேடு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு எதிராக அமலாக்கத்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் மட்டுமல்ல, பாஜக கூட்டணி கட்சியான சிவசேனாவும் கண்டித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி நிதி மோசடி வழக்கில் சரத்பவார், அமலாக்கத்துறையால், குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை அவருக்கு சம்மன் அனுப்பப்பட வில்லை என்ற போதிலும் தானாக முன்வந்து என்று மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக போவதாக சரத்பவார் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    Congress and Shiv Sena supports Sharad Pawar

    இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இதுபற்றிக் கூறுகையில், மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு லேட்டஸ்ட் உதாரணம் சரத்பவார் மீதான நடவடிக்கை. மகாராஷ்டிரா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அரசியல் தான் இதன் பின்னணியில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி கட்சியாக இருந்து வரும் சிவசேனாவும் அமலாக்கத்துறையின் நடவடிக்கையை கண்டித்துள்ளது.

    சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறுகையில், "சரத் பவார் அரசியலின் பீஷ்ம் பிதாமகன். இதற்கு முன்பு மகாராஷ்டிராவில் பழிவாங்கும் அரசியல் இருந்ததில்லை. சரத் பவார் மகாராஷ்டிரா மற்றும் விவசாயத்துறைக்கு நிறைய நல்ல பணிகளையாற்றியுள்ளார். எங்கள் சித்தாந்தம் பவாரிலிருந்து வேறுபட்டது, ஆனால் அமலாக்கத்துறை அவரை நடத்தும் விதம் சரியில்லை " என்றார்.

    English summary
    Congress and Shiv Sena supports Sharad Pawar over Enforcement Directorate (ED) action against Sharad Pawar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X