ஆர்எஸ்எஸ் கோட்டையை உடைத்த காங்கிரஸ்.. நாக்பூர் எம்எல்சி தேர்தலில் அமோக வெற்றி! பாஜகவுக்கு ஷாக்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆர்எஸ்எஸ் கோட்டையான நாக்பூர் எம்எல்சி தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் கட்சியின் அபிஜித் கோவிந்தராவ் வஞ்சாரி அமோக வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக 28 இடங்களுக்கு நடந்த எம்எல்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வாக்குச்சீட்டு முறையில் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் வெல்லவில்லை என்று கிண்டல் செய்த பிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோரை தற்போது காங்கிரஸ் கட்சியினர் சாடி வருகின்றனர்.

nagpur mlc election

மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமேலவை உள்ளன. சட்ட மேலவை உறுப்பினர்கள் எம்எல்சிக்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்த 4 மாநிலங்களிலும் காலியாக இருந்த 28 எம்எல்சி இடங்களுக்கு தேர்தல் நடந்தது.

இதன் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஸின் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

நாக்பூர் டிவிஷன் பட்டதாரி தொகுதிக்கான எம்எல்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட அபிஜித் கோவிந்தராவ் வஞ்சாரி அமோக வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் சுதாகர் கோலே என்பவரை 3,271 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

தற்போது வென்ற அபிஜித் கோவிந்தராவ் வஞ்சாரி கடந்த 2020 தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் இந்த நாக்பூர் டிவிஷன் பட்டதாரி தொகுதியில் வென்று எம்எல்சி ஆன நிலையில் தற்போது மீண்டும் வாகை சூடியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் தலைமையகம் மட்டுமின்றி நாக்பூர் எம்பியாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இருக்கிறார். அதோடு மகாராஷ்டிரா முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ்ம் நாக்பூரை சேர்ந்தவர் தான். இதனால் நாக்பூர் எப்போதுமே பாஜகவின் கோட்டையாக கருதப்படும். இந்நிலையில் தான் தற்போது பாஜக கோட்டையான நாக்பூரில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஓட்டை போட்டுள்ளது.

இதன்மூலம் மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 28 இடங்களில் நடந்த எம்எல்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறவே இல்லை என கூறியது பொய்யக்கப்பட்டுள்ளது. நாக்பூர் டிவிஷன் பட்டதாரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக சாடி வருகின்றனர்.

நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கையின்போது காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் பின்தங்கியிருந்தது. எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இதனால் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ''உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 4 பெரிய மாநிலங்களில் 28 இடங்களுக்கு எம்எல்சி தேர்தல் நடந்தது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது? யூகிங்கள்'' என்று கூறியிருந்தார்.

அதேபோல் பிரதமர் மோடியின் பதிவிற்கு, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து இருந்தார். அதில், ''காங்கிரஸ் கட்சிக்கு பெரிய முட்டை கிடைத்துள்ளது. குறைந்தபட்சம் இதிலாவது காங்கிரஸ் கட்சி சீராக இருக்கிறது'' என்று கிண்டல் செய்தார். நாக்பூர் எம்எல்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தேபோதே பாஜக வேட்பாளர் வெல்வார் என்ற நம்பிக்கையில் பிரதமர் மோடி, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இந்த பதிவை செய்த நிலையில் தற்போது காங்கிரஸ் வாகை சூடியுள்ளது. இதனால் பிரதமர் மோடி, தேவேந்திர பட்னாவிஸை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விளாசி வருவதோடு, பதிலடி கொடுத்து கிண்டல் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+