வடஇந்திய வாக்காளர்களுக்கு தனி தேர்தல் அறிக்கை! காங்கிரஸின் புது கேம்.. கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்
மும்பை: மகாராஷ்டிராவில் மும்பை உட்பட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதற்கிடையே மும்பை உள்ளாட்சித் தேர்தலில் வட இந்திய வாக்காளர்களைக் குறிவைத்து காங்கிரஸ் தனித் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது மராத்தி சமூக ஆர்வலர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் மும்பை உட்பட பல மாநகராட்சிகளில் காங்கிரஸ் தனித்துக் களமிறங்குகிறது. மொத்தம் 500+ சீட்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இத்தனை சீட்களில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது இதுவே முதல்முறையாகும். இந்த முறை தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற்றே தீர வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மும்பையில் கணிசமான இடங்களில் வெல்ல வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.

காங்கிரஸ் செயல்பாடு
இந்தத் தேர்தலில் மும்பையில் வாழும் ஒடிசா, உபி போன்ற வடமாநிலத்தவர் வாக்குகளைப் பெறக் காங்கிரஸ் முயல்கிறது. இதற்காகவே வட இந்தியர்களைக் குறிவைத்து தனியாக ஒரு தேர்தல் அறிக்கையையும் காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. இதுவே இப்போது அங்குப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அங்குள்ள மராத்தி அமைப்புகள் காங்கிரஸின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நேற்றைய தினம் மும்பையில், 12க்கும் மேற்பட்ட சமூக- பண்பாட்டு அமைப்புகள் ஒன்றாகக் கூடின. அந்த அமைப்புகள் இணைந்து தனியாக 'மராத்திநாமா' எனப்படும் மராத்தி மக்களின் கோரிக்கை அறிக்கை என்ற வரைவு அறிக்கையை வெளியிட்டன. அதில் உள்ளாட்சித் தேர்தல்களில் மராத்தி அமைப்பினருக்கு மட்டுமே வாய்ப்பு தர வேண்டும், வேலைவாய்ப்பில் மராத்தி மக்களுக்கு 80% இடஒதுக்கீடு எனப் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கண்டனம்
மேலும், உள்ளாட்சித் தேர்தலில் மராத்தி சரளமாகப் பேசும் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் மும்பையின் மேயர் ஒரு மராத்தியராக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை உள்ளன. இதை வெளியிட்டுப் பேசிய சமூக ஆர்வலர்கள், இந்த உள்ளாட்சித் தேர்தலில் மராத்தி மக்களுக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும் என்றார். அப்போது வட இந்தியர்களுக்காகக் காங்கிரஸ் தனியாகத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதையும் அவர்கள் கடுமையாகக் கண்டித்தனர்.
ஏற்கவே முடியாது
இது தொடர்பாக சம்யுக்த மகாராஷ்டிரா சமிதியின் ஒருங்கிணைப்பாளர் சுஹாஸ் ரானே கூறுகையில், "மராத்தி மொழி, மக்கள் மற்றும் மகாராஷ்டிரத் தர்மம் குறித்து வெறும் வாய்வழியாகப் பேசிய கட்சிகள், மராத்தி மேம்பாட்டில் தவறிவிட்டன. வட இந்தியர்களுக்காகக் காங்கிரஸ் தனி அறிக்கை வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. எல்லோரும் எல்லா விஷயங்களிலும் ஒத்த கருத்து கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் மராத்தி நலனுக்காக அனைவரையும் ஒன்றிணைப்பது அவசியம்" என்று தெரிவித்தார். இப்படிப் பலரும் காங்கிரஸ் தனித் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதைக் கண்டித்தனர்.
காங்கிரஸ் விளக்கம்
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், "நாங்கள் வட இந்தியர்களுடன் எப்போதும் துணை நின்றுள்ளோம். மும்பையில் அவர்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுத்துள்ளோம். அவர்களுக்குப் பிரதிநிதித்துவமும் வழங்கியுள்ளோம். சிலர் மொழி பிரச்சினையை வைத்துத் தேர்தல் அரசியலை மாற்றப் பார்க்கிறார்கள். ஆனால், இது மும்பை பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தேர்தல். அதைப் பிரச்சாரத்தில் முன்வைப்போம்" என்றார்.
மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ஜனவரி 15ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 227 உறுப்பினர்களைக் கொண்ட பிருஹன்மும்பை மாநகராட்சியும் அடங்கும். பல மாநிலங்களின் படஜெட்டை விட மும்மை மாநகராட்சி பட்ஜெட் பெரியது என்பதாலேயே இது அதிகக் கவனம் பெறுகிறது. ஜனவரி 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
-
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. டென்ஷனான ராகுல் காந்தி.. கூட்டத்தில் எம்பிக்கள் வாக்குவாதம்! -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications