பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு வைத்தால்.. அதனை பலாத்காரம் என சொல்ல முடியாது.. நீதிமன்றம் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: ''திருமணம் செய்வதாக அளித்த வாக்குறுதியை நம்பி நீண்டகாலம் உடலுறவு வைத்துவிட்டு பிறகு பலாத்காரம் என்று கூறுவதை ஏற்க முடியாது'' என்று 33 வயது இளைஞரை மகாராஷ்ராவின் தானே மாவட்டத்தில் உள்ள செசன்ஸ் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா பகுதியை சேர்ந்தவர் ஷபாஸ் முகமது சலீம். இவர் மால் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த மாலில் பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவர் விவாகரத்து பெற்று சென்றுவிட்டார்.

consensual-relationship-is-not-rape-maharashtra-district-court-acquitted-33-year-man

இதனால் அந்த பெண் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். குடும்ப செலவுக்காக அந்த பெண் மாலில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் விவாகரத்து பெற்ற பெண்ணுக்கும் ஷபாஸ்க்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் இருவரும் நட்பாக பழகினர்.

அதன்பிறகு இந்த நட்பு காதலாக மாறியது. கடந்த 2016ல் ஷபாஸ் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் ஓகே சொல்லியுள்ளார். இதையடுத்து இருவரும் ஜோடியாக வலம் வந்துள்ளனர். அதுமட்டுமின்றி உடலுறவும் வைத்துள்ளனர். கடந்த 2018 ம் ஆண்டு வரை இருவரும் அவ்வப்போது உடலுறவு வைத்துள்ளனர். அதன்பிறகு அந்த பெண் திருமணம் செய்து கொள்ளும்படி ஷபாஸிடம் கூறியுள்ளார்.

அதற்கு ஷபாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விவாகரத்து பெற்ற அந்த பெண் ஷபாஸ் மீது பலாத்கார புகார் கொடுத்தார். தன்னை திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிவிட்டார். திருமணம் செய்யும்படி கூறியதற்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரை தொடர்ந்து ஷபாஸ் மீது பாலியல் பலாத்காரம், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், மிரட்டல் விடுத்தல் உள்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஷபாஸ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு தானே மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விசாரணை நடந்து வந்தது. விசாரணையில் இருவருக்கும் இடையேயான உறவு என்பது பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது தெரியவந்தது. அதோடு 2 ஆண்டுகள் வரை அந்த பெண் எந்த புகாரும் அளிக்காமல் உறவில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கூடுதல் அமர்வு நீதிபதி ரூபி யு மால்வன்கர் தீர்ப்பு வழங்கினார்.

அப்போது அவர், ''2 ஆண்டுகளாக புகார்தாரர் உறவில் இருந்துள்ளார். இந்த காலத்தில் அவர் குற்றம்சாட்டப்பட்டநபருக்கு எதிராக எந்த புகாரையம் அளிக்கவில்லை. ஏமாந்ததாகவும் கூறவில்லை. இந்த செயல் என்பது பாலியல் உறவில் அவரும் சம்மதத்துடன் இருந்ததை தான் காட்டுகிறது. திருமண வாக்குறுதியின் பேரில் பாலியல் உறவு கொள்வதற்கும், ஏமாற்றுவதற்காக தான் அந்த நபர் உறவை தொடங்கினார் என்பதை காட்டுவதற்கான ஆதாரங்கள் இல்லை.

திருமணம் செய்வதாக அளித்த வாக்குறுதியின் பேரில் இருவரும் தங்களின் பரஸ்பர சம்மதத்துடன் நீண்டகாலம் உறவு வைத்துள்ளனர். இந்த உறவில் ஆரம்பத்தில் இருந்து மோசடி நோக்கம் இல்லை. அப்படி என்றால் இதனை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது'' என தீர்ப்பு வழங்கினார். அதோடு குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டால் குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுகிறார். அவரது ஜாமீன் பத்திரங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+