மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொத்து கொத்தாக சுருட்டிய கொரோனா... தடுப்பூசியால் தப்பிய மக்கள் - 47,23,83,752 பேர் மீண்டனர்

உலகம் முழுவதும் கொரோனாவால் 51,76,07,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 47,23,83,752 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 62,77,612 பேர் உயிரிழந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 51,76,07,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 47,23,83,752 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 62,77,612 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் 39,660 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Corona affects 51,76,07,024 people worldwide - 47,23,83,752 recovered

கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. தற்போது XE என்ற புதிய வகைக் கொரோனா பரவி வருகிறது.

சீனாவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்து ஷாங்காய் நகரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்திலிருந்து இங்கு லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலகோடி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், உணவு, மருத்துவ உதவி, அடிப்படைவசதிகளுக்கு கூட மிகவும் சிரமப்படுகிறார்கள்.

உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 3,23,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 51,76,07,024 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,92,721 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 47,23,83,752 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் 990 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 62,77,612 பேராக உயர்ந்துள்ளது.

மரணபயம் காட்டிய கொரோனா...மெல்ல மீளும் உலக மக்கள் - 47,18,50,322 பேர் மீண்டனர் மரணபயம் காட்டிய கொரோனா...மெல்ல மீளும் உலக மக்கள் - 47,18,50,322 பேர் மீண்டனர்

இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. 1,921 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,31,07,322 பேராக உயர்ந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் 7,354 பேர் புதிதாக ஒரே நாளில் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 40,350 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் ஒரே நாளில் 20,601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி நாட்டில் 17,155 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதால் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

English summary
Corona update world wide: (உலக அளவில் கொரோனா பாதிப்பு அப்டேட்) Worldwide, corona affects 51,76,07,024 people. 47,23,83,752 people have recovered from corona damage. Corona killed 62,77,612 people worldwide. Around the world, 39,660 people are being treated for anxiety.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X