உலக அளவில் கொரோனா தீவிரம்... ஒரே நாளில் 6,31,550 பேர் பாதிப்பு - 41,971 பேர் தீவிர சிகிச்சை

உலகம் முழுவதும் கொரோனாவால் 51,13,74,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 46,46,75,111 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 62,52,925 பேர் உயிரிழந்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 6,31,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 51,13,74,672 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் 46,46,75,111 பேர் மீண்டுள்ளனர். 62,52,925 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 40,446,636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. தற்போது XE என்ற புதிய வகைக் கொரோனா பரவி வருகிறது.

 சீனாவில் கொரோனா

சீனாவில் கொரோனா

சீனாவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்து ஷாங்காய் நகரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்திலிருந்து இங்கு லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் 2.50 கோடி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், உணவு, மருத்துவ உதவி, அடிப்படைவசதிகளுக்கு கூட மிகவும் சிரமப்படுகிறார்கள்.

ஷாங்காய் லாக்டவுன்

ஷாங்காய் லாக்டவுன்

ஷாங்காய் நகரில் உள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்வதற்காக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை சீன அரசு களமிறக்கியுள்ளனது. லாக்டவுனிலும், கட்டாய கொரோனா பரிசோதனையிலும் மக்கள் சிக்கியிருப்பதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்கூட வெளியே செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா

உலகம் முழுவதும் ஒரே நாளில் 6,31,550 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 51,13,74,672 பேர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 6,05,550 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 46,46,75,111பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் 2,587 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 62,52,925 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

 அதிகரிக்கும் கொரோனா

அதிகரிக்கும் கொரோனா

பிரான்ஸ் நாட்டில் 67,711 பேர் புதிதாக ஒரே நாளில் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 1,24,863 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் ஒரே நாளில் 76,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் நாட்டில் 37,258 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 மெல்ல உயரும் எண்ணிக்கை

மெல்ல உயரும் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. 2,746 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+