தீவிரம்.. மகாராஷ்டிராவில் 20 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு.. நாடு முழுக்க 62 ஆயிரம் பேருக்கு கொரோனா!
மும்பை: இந்தியாவில் மகாராஷ்டிராவில் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 1 மாதமாக கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. வெறும் 4 நாட்களில் இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு அடைகிறது.
இந்தியாவில் மொத்தம் 62,808 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மொத்தம் 2,101 பேர் பலியாகி உள்ளனர்.

நிலை என்ன
இந்தியாவில் இதுவரை 19,301 பேர் குணமடைந்து உள்ளனர். 41,402 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மகாராஷ்டிராவில் 20,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 779 பேர் பலியாகி உள்ளனர். மும்பையில் மட்டும் 12864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 490 பேர் அங்கு பலியாகி உள்ளனர். குஜராத்தில் 7797 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 472 பேர் பலியாகி உள்ளனர்.

டெல்லி எப்படி
டெல்லியில் 6542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 68 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 6535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 44 பேர் பலியாகி உள்ளனர். இன்று மட்டும் தமிழகத்தில் 526 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. ராஜஸ்தானில் 3708 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 106 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய பிரதேசம் நிலை
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 211 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. மத்திய பிரதேசத்தில் 3547 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் 3373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 74 பேர் பலியாகி உள்ளனர். அம்மாநில மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் இது குறைவான எண்ணிக்கை ஆகும். ஆந்திர பிரதேசத்தில் 1930 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர நிலை என்ன
ஆந்திராவில் மொத்தம் 44 பேர் பலியாகி உள்ளனர். அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் 1786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 171 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இறப்பு சதவிகிதம் 10% என்ற நிலையில் உள்ளது. இதுதான் இந்தியாவில் மிகவும் அதிகம் ஆகும். இந்தியாவில் தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் 1.4% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications