மே மாசத்தில் இந்தியாவில் கொரோனா உச்சத்தைத் தொடுமாம்.. பீதி கிளப்புறாங்களே
மும்பை: இந்தியாவில் மே மாத மத்தியில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தைத் தொடும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
Recommended Video
தற்போது இந்தியாவில் பரவி வரும் இந்த வைரஸின் தாக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விவர ஆய்வின் இறுதியில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக சர்வதேச நிறுவமான புரோட்டிவிட்டி தெரிவித்துள்ளது.
டைம்ஸ் நெட்வொர்க்குடன் இணைந்து புரோட்டிவிட்டி இதுதொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் இறுதியில் மே மாத மத்தியில் கொரோனாவைரஸ் தாக்கம் இந்தியாவில் உச்சத்தைத் தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசியூ வசதி
இந்தியாவில் தற்போது உள்ள 30,000 கேஸ்கள் என்ற நிலை மே மாத மத்தியில் 2,86,000 லட்சமாக உயரும். பாதிக்கப்பட்டோரில் 30 சதவீதம் பேருக்கு ஐசியூ வசதி தேவைப்படும் நிலையில் இருப்பார்களாம். பாதிக்கப்பட்டோரின் சதவீதம், பாதிக்கப்பட்டு மீண்டோரின் எண்ணிக்கை அடிப்படை உள்ளிட்ட மொத்தம் 3 விதமான காரணிகளை வைத்து இந்த முடிவுக்கு புரோட்டிவிட்டி - டைம்ஸ் நெட்வொர்க் குழு வந்துள்ளது.

மாநிலங்கள்
பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் பட்டியலைப் பார்த்தால் இந்த நோய்த் தாக்கம் தேசிய அளவில் தொடரவே செய்யும் என்று அனுமானிக்கப்படுகிறது. ஆகஸ்ட் கடைசி வரை இது தொடரலாம். சில மாநிலங்கள் மே கடைசி அல்லது ஜூன் முதல் வாரத்தில் இதிலிருந்து மீள வாய்ப்புள்ளது. அதேசமயம், அதிக அளவிலான பாதிப்புகளைக் கொண்ட மாநிலங்களில் தீவிரம் குறைய நிறைய நாட்கள் பிடிக்கும்.

ஆய்வு
மத்திய அரசு வழங்கும் புள்ளிவிவரங்கள், அரசு தரும் தகவல்கள் மற்றும் தினசரி சுகாதாரத் துறை வெளியிடும் செய்திக்குறிப்புகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து டைம்ஸ் நெட்வொர்க் குழும நிர்வாக இயக்குநர் எம்.கே. ஆனந்த் கூறுகையில், நமது காலத்தில் நாம் சந்தித்துள்ள மிகப் பெரிய வரலாறு காணாத சமூகப் பொருளாதார தாக்கத்தை சந்தித்துள்ளோம் என்றார்.

கன்டெய்ன்மென்ட் பகுதிகள்
லாக்டவுன் நீடிப்பதும், கன்டெய்ன்மென்ட் பகுதிகளைத் தொடர்வதும் இந்த பேராபயத்திலிருந்து நம்மைக் காக்க உதவும். எனவே அதை குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்தாக வேண்டும். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தியதில் மிகவும் துரிதமாக களம் இறங்கி விட்டோம். முன்கூட்டியே இறங்கி விட்டோம். அது பாராட்டுக்குரியது. மேலும் முன்கூட்டியே நாம் ஆயத்த நிலையில் இதை அணுகியதும் பாராட்டுக்குரியது என்றும் இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications