6 மணி நேரம்.. நடிகை தீபிகா படுகோனிடம் தீவிர விசாரணை நடத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள்
மும்பை: போதை மருந்து தொடர்பு குறித்து நடிகை தீபிகா படுகோனிடம், மும்பையில் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
மும்பையில், நடிகர் சுஷாந்த் சிங் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவருக்கு போதை மருந்து சப்ளை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சிபிஐயும் களத்தில் குதித்தது. இது பற்றிய விசாரணையின்போது, சினிமா உலகில் நிலவும் போதை மருந்து பழக்கம் பற்றி தினமும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இந்த வழக்கில், சுஷாந்த் காதலியும் நடிகையுமான, ரேகா ஏற்கனவே சிறையில் உள்ளார்.

தீபிகா படுகோன்
போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்திய நிலையில், பாலிவுட் முன்னணி நடிகையான, தீபிகா படுகோனுக்கு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கோவா டூ மும்பை
கோவாவில் இருந்தார் தீபிகா படுகோனே. சம்மன் கிடைத்ததும், நேற்று காரில் கிளம்பி ஏர்போர்ட் சென்று, அங்கிருந்து விமானத்தில், மும்பை வந்தார். இந்த நிலையில் மும்பை கொலபாவிலுள்ள துறைமுக அறக்கட்டளை விருந்தினர் மாளிகையில் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் காலை 9.45 மணி முதல் விசாரணையை துவக்கினர். தொடர்ந்து 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

கணவரோடு வருகை
அலுவலகத்திற்கு தீபிகாவுடன் அவர் கணவரான நடிகர், ரன்வீர் சிங்கும் வருகை தந்தார். தீபிகா படுகோனிடம் 2017ம் ஆண்டு நடிகர்-நடிகைகளிடையே நடந்த வாட்ஸ்அப் குரூப் உரையாடல் பற்றி விசாரிக்கப்பட்டது. அந்த வாட்ஸ்அப் உரையாடலில் போதை மருந்து பற்றி பேசப்பட்டுள்ளது. இன்றைய விசாரணைக்கு பிறகு மீண்டும் தீபிகாவிடம் விசாரிக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே தீரன் அதிகாரம் 1 திரைப்பட புகழ் ரகுல் பிரீத் சிங், நடிகைகள் சார அலி கான், சாரதா கபூர் ஆகியோரிடமும் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

விசாரணைகள்
இதில் ரகுல் பிரீத் சிங்கிடம் விசாரணை நிறைவடைந்துள்ளது. நேற்று 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தி விவரங்கள் கேட்கப்பட்டன. மற்ற இருவரும், இன்று பிற்பகலில் ஆஜராகும் வாய்ப்பு உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications