தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடிக்கு 2வது குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே - நடிகர் ரன்வீர் சிங் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதிக்கு கடந்த 2024ம் ஆண்டில் முதல் பெண் குழந்தை பிறந்த நிலையில் இன்று 2வது பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார் நடிகை தீபிகா படுகோனே.

deepika-padukone-ranveer-singh-welcomed-their-second-child-its-a-baby-girl

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே - நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் கடந்த 2018 ம் ஆண்டில் திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு கடந்த 2024ம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தான் தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பமானார். இந்நிலையில் தான் தீபிகா படுகோனேவிற்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை தீபிகா படுகோனே மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் ஆகியோர் இணைந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர். மனிதர்களின் கால்தடம் போட்டோவை பதிவிட்டுள்ள அவர்கள் அதன் அடியில் ''Welcome Baby Girl'' என்றும், 19/9/2026 என்ற தேதியை குறிப்பிட்டு உள்ளனர். இதனை பார்த்த பலரும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதிக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

சினிமா பிரபலங்களான சோனம் கபூர், சாரா அர்ஜுன், அனில் கபூர், கிரிர்த்தி சனோன, சோனுசூட், ஸ்ரேயா கோஷல், உள்பட பலரும் நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.அதேபோல் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங்கின் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த 2024ம் ஆண்டில் முதல் முதலாக பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை செப்டம்பர் மாதம் 9 ம் தேதி பிறநதது. அப்போதும் இருவரும் 'வெல்கம் பேபி கேர்ள்' என்று தான் தங்களுக்கு குழந்தை பிறந்ததை அறிவித்து இருந்தனர். இப்போதும் மீண்டும் அதே செப்டம்பர் மாதத்தில் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

முன்னதாக நேற்று தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். அதன்பிறகு இன்று தீபிகா படுகோனேவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு முன்பாக ரன்வீர் சிங் லால்பாக்சா ராஜா விநாயகரை வழிபாடு செய்தார். முதல் குழந்தை பிறப்பதற்கு முன்பாகவும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஆகியோர் இப்படி வழிபாடு செய்திருந்தனர்.

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இருவரும் காதல் திருமணம் செய்தனர். இருவரும் 'கோலியான் கி ராஷ்லீலா ராம் லீலா' என்ற திரைப்படத்தில் நடித்தனர். அதில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் இத்தாலியில் நடந்தது. கொங்கனி மற்றும் சிந்தி பாரம்பரிய முறையில் நடந்தது. இப்போது இந்த தம்பதிக்கு 2014ல் பெண் குழந்தை பிறந்த நிலையில் இப்போது 2வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+