மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்சிபியுடன் கூட்டணியா? யாரு பாஜகவா?.. நெவர் நெவர் நெவர்.. அன்று பட்னவீஸ் பேசிய ட்வீட் வைரல்!

கமலின் வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் காட்சி வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைப்பதா அது ஒரு போதும் நடக்காது என 2014-இல் தேவேந்திர பட்னவீஸின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

    மகாராஷ்டிராவில் ஆளுநர் அழைத்தும் ஆதரவு கடிதம் கொடுக்க முடியாததால் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக கூறிவிட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு என்சிபியின் அஜித் பவாரின் ஆதரவுடன் முதல்வராக தேவேந்திர பட்னவீஸ் பதவியேற்றார்.

    துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். இதையடுத்து இந்த மாதம் 30-ஆம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என புதிய அரசுக்கு ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டிருக்கிறார்.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    இந்த நிலையில் அஜித் பவார் பாஜகவை ஆதரித்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது என்சிபியின் முடிவல்ல என்றும் அஜித்தின் தனிப்பட்ட முடிவு என்றும் சரத்பவார் தெரிவித்துள்ளார். என்சிபியை பாஜக உடைத்துவிட்டதாக சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் கூறுகின்றன.

    மவுனம்

    மவுனம்

    இந்த நிலையில் கடந்த 2014-இல் தேவேந்திர பட்னவீஸ் தனது ட்விட்டரில் கூறிய கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது. அதில் என்சிபியுடன் பாஜக ஒரு போதும் கூட்டணி அமைக்காது. உள்நோக்கத்துடன் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அக்கட்சியின் ஊழலை நாங்கள் சட்டசபையில் நிரூபித்துள்ளோம். மற்றவர்களெல்லாம் மவுனமாக இருந்தனர் என கூறியிருந்தார்.

    கடும் விமர்சனம்

    கடும் விமர்சனம்

    இவ்வாறு 2014-இல் ஒரு போதும் என்சிபியுடன் பாஜக கூட்டணி வைக்காது என கூறிவிட்டு அதை 5 ஆண்டுகள் பட்னவீஸ் மறந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. மகாராஷ்டிரத்தின் நீர் வளத் துறை அமைச்சராக இருந்த அஜித் பவார் ரூ 20 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்ததாக சட்டசபையில் பாஜக கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.

    பால்தாக்கரே

    பால்தாக்கரே

    அது போல் என்சிபியுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே கூறிய கருத்துகளும் சில நாட்களுக்கு முன்னர் வைரலானது குறிப்பிடத்தக்கது. அயோக்கியர்களுடன் நான் எந்த காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டேன். அது யாராக இருந்தாலும் சரி என 1999-ஆம் ஆண்டு பால் தாக்கரே விமர்சித்திருந்தார்.

    English summary
    Maharastra CM Devendra Fadnavis in 2014 says that BJP will never form any alliance with NCP. His tweet goes viral now.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X