பட்னாவிஸ் டூ அசோக் சவான் மகள் வரை.. மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறார். இந்த நிலையில் தான் 99 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் முதல்வர் அசோக் சவான் மகள் ஸ்ரீஜெயா உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் தான் மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதன்பிறகு நவம்பர் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தலிலும் பாஜக மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து களமிறங்க உள்ளது. இந்த கூட்டணியில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இடம்பெறுகிறதா? இல்லையா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
இதற்கிடையே தான் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 99 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியில் முதல்வராக செயல்பட்டு வந்த அசோக் சவான் கடந்த பிப்ரவரி மாதம் விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது அசோக் சவானின் மகளுக்கு பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது. அசோக் சவானின் மகள் ஸ்ரீஜெயா போகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதேபோல் மகாராஷ்ரா மாநில பாஜக தலைவராக உள்ள சந்திரசேகர் பவன்குலேவுக்கு காம்தி சட்டசபை தொகுதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கார்கோபர் மேற்கு தொகுதியில் பாஜகவின் ராம் கதம், சிக்லி தொகுதியில் ஸ்வேதா மஹாலே பாட்டீல், கன்காவ்லி தொகுதியில் நிதிஷ் ரானே உள்ளிட்டவர்கள் களமிறங்க உள்ளனர்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications