தாஜ் மஹாலை தோற்கடித்த தாராவி.. ஆசியளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த பட்டியலில் இடம் பிடிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியாக கருதப்படும் மும்பையில் உள்ள தாராவி பகுதி, 2019-ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி பார்க்கும் இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதுமட்டுமல்ல நடப்பாண்டில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ் மஹாலையும் தோற்கடித்துள்ளது தாராவி.

நாட்டின் பொருளாதார தலைநகரமான மும்பையின் மத்திய பகுதியில் உள்ள தாராவி குடிசை பகுதியில், சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குறுகிய சந்துகளிலும், திறந்த சாக்கடைகளின் ஓரத்திலும் வசித்து வருகின்றனர்.

Dharavi Beat Taj mahal.. It has reportedly attracted a large number of tourists

தாராவியிலுள்ள மிகப்பெரிய எண்ணிக்கையில் வாழும் மக்களை கொண்டு, பல குடிசைத் தொழில்கள் நடைபெறுகின்றன. இங்கு தோல் பொருட்கள், மட்பாண்டங்கள், துணி வகைகள் முதன்மையாகத் தயாரிக்கப்படுகின்றன. இங்கு நடைபெறும் வணிகத்தின் அளவு பல பில்லியன் அமெரிக்க வெள்ளிகள் என்று மதிப்பிடப்பட்டள்ளது.

ஆஸ்கார் விருதுகளை அள்ளிய ஸ்லம்டாக் மில்லியனர் ஹாலிவுட் படத்தில், முக்கிய இடமாக தாராவி இருந்தது. அதிலிருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஒரு இடமாக தாராவி மாறிவிட்டது. காலா உள்ளிட்ட பல திரைப்படங்கள் தாராவியை மையமாக வைத்து வெளி வந்ததால், அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறைகளை பற்றி அறிந்து கொள்வதில் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் விரும்பி பார்க்கும் இடங்களின் பட்டியலை, டிரிப் அட்வைசர்ஸ் டிராவலர்ஸ் என்ற சர்வதேச அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் எங்கெல்லாம் போக விரும்புகிறார்கள் என்பது குறித்து ஆய்வு நடத்தி இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலின் முதலிடத்தில் "ஸ்மால் குரூப் டூர் டு தாராவி இன் மும்பை" முதலிடம் பிடித்துள்ளது. இதே போல ஆசியாவில் 2019-ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி பார்க்கும் 10 இடங்கள் பட்டியலிலும், தாராவி குடிசை பகுதி இடம் பெற்றுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ் மஹாலின் பெயரே இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது தான்.

இந்தியாவை பொருத்த வரை சுற்றுலாப் பயணிகள் விரும்பி பார்க்கும் இடங்களில் தாராவிக்கு அடுத்ததாக "பைக் டூர் ஆப் ஓல்டு டெல்லி" இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் "சூப்பர் பாஸ்ட் ரயில் மூலம் தாஜ் மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை டூர்" உள்ளது.

மேலும் இந்த பட்டியலில் அடுத்த இடங்களில் உள்ளவை, டெல்லியிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக முழுநாள் ஆக்ரா டூர், மற்றும் தாஜ் மஹால் டூர், தி ஒரிஜினல் டெல்லி ஷாப்பிங் டூர், மற்றும் மும்பை லஞ்ச் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+