எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஓட்டல் முன்பு சிவக்குமார் உருக்கம்.. அனுமதி மறுப்பால் உச்சகட்ட பரபரப்பு
Recommended Video
மும்பை: ராஜினாமா கடிதம் அளித்துவிட்டு பாஜகவின் பாதுகாப்பில் மும்பையில் ஓட்டலில் உள்ள எம்எல்ஏக்களை சந்திக்க கர்நாடக அமைச்சர் டிகே சிவகுமார் வந்துள்ளார். அவரை போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளதால் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.
கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10எம்எல்ஏக்கள் மற்றும் 3 மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் சபாநாயகரின் செயலாளரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மாயமாகினர். இந்த ராஜினமா கடிதத்தை ஏற்றால் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 103 ஆக குறைந்துவிடும். அதேநேரம் பாஜகவின் பலம் சுயேட்சைகளின் ஆதரவுடன் 107 ஆக உயரும் என்பதால் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும்.

எனவே அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்வதற்காக அவர்கள் தங்கியுள்ள ரெனைசன்ஸ் மும்பை கன்வென்சன் சென்டர் நட்சத்திர ஓட்டலுக்கு கர்நாடக அமைச்சர் டிகே சிவக்குமார் வந்துள்ளார்.
அவரை ஓட்டலுக்குள் நுழைய மகாராஷ்டிரா மாநில போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதன் காரணமாக அங்கு உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.
ஓட்டலுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவக்குமார் கூறுகையில், "என்னுடைய நண்பர்கள் இந்த ஓட்டலில் தங்கி உள்ளார்கள்: நான் இந்த ஓட்டலில் ரூம் புக்கிங் செய்ய வந்துள்ளேன்: எங்களுக்குள் சிறிய பிரச்னை, அதனை நாங்கள் பேசி தீர்க்கப்போகிறோம். நாங்கள் உடனே ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என வெட்டிக்கொண்டு செல்ல முடியாது" என்றார்.
மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, இதில் மிரட்டல் என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்துள்ளோம் என்றும் புரிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார். சிவக்குமார் ஓட்டல் முன்பே இருப்பதால் அங்கு பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது.
-
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications