சாதாரண 2BHK வீடு.. சொந்தமாக செல்போன் கூட இல்லை.. ரத்தன் டாடாவின் தம்பி ஜிம்மி டாடா பற்றி தெரியுமா!
மும்பை: இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபரான ரத்தன் டாடா மறைவு செய்தி பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு ரத்தன் டாடா குறித்து அனைவருக்கும் தெரியும்.. ஆனால், அவரது சகோதரர் ஜிம்மி டாடா குறித்தும் அவரது எளிமையான வாழ்க்கை குறித்தும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரை குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ரத்தன் டாடாவை பற்றி இங்கு அனைவருக்கும் தெரியும். உலக அரங்கில் டாடா குழுமத்தைக் கொண்டு சென்றவர்.. இவரது தலைமையில் தான் டாடா குழுமம் மிகப் பெரிய வளர்ச்சியைச் சந்தித்தது.

அதேநேரம் மிகவும் எளிமையான மற்றும் அமைதியான வாழ்க்கையை நடத்தும் அவரது சகோதரர் ஜிம்மி டாடா குறித்து நம்மில் சிலருக்கு மட்டுமே தெரியும். அவரை பற்றி நாம் பார்க்கலாம்.
ஜிம்மி டாடா: பெரும்பாலும் ஊடகங்களில் இருந்து விலகி மிகவும் அமைதியான வாழ்க்கையையே ஜிம்மி டாடா வாழ்ந்து வந்தார். இருப்பினும், அவரது எளிமையான வாழ்க்கை முறை குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ரத்தன் டாடாவின் சகோதரரான ஜிம்மி டாடா குறித்து நாம் பார்க்கலாம்.
பழைய போட்டோ: ரத்தன் டாடாவின் இளைய சகோதரரான இவரது முழு பெயர் ஜிம்மி நேவல் டாடா.. இவர் டாடா குழுமத்தில் கணிசமான பங்கைக் கொண்டிருந்தாலும், இவர் குடும்ப பிஸ்னஸில் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் அவர் எளிமையான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தார். ஜிம்மி டாடாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்தன் டாடா இன்ஸ்டாகிராமில் பழைய போட்டோவை பகிர்ந்து வாழ்த்து சொல்லி இருந்தார். அப்போது தான் ஜிம்மி டாடா எந்தளவுக்கு ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்தது.
பிரபல தொழிலதிபரும் லக்னோ ஐபிஎல் அணி உரிமையாளருமான ஆர்பிஜி எண்டர்பிரைசஸின் தலைவர் ஹர்ஷ் வர்தன் கோயங்கா கூட ஜிம்மியின் எளிமையான வாழ்க்கை முறையைப் பார்த்து வியந்து ட்வீட் செய்திருந்தார். மும்பையின் கொலாபாவில் உள்ள ஹாம்ப்டன் கோர்ட் என்ற பகுதியில் தான் ஜிம்மி டாடா வாழ்ந்து வருகிறார்.
சாதாரண குடியிருப்பு: அங்கு ஜிம்மி டாடாவுக்கு ஆடம்பர பங்களா எல்லாம் இல்லை. மிகச் சாதாரணமாக அங்குள்ள ஒரு கட்டிடத்தில் ஆறாவது மாடியில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டில் தான் அவர் வசித்து வருகிறார். மேலும், ஜம்மி டாடாவுக்கு ஸ்குவாஷ் விளையாடுவதில் ஆர்வம் என்றும் ஹர்ஷ் வர்தன் கோயங்கா தெரிவித்துள்ளார்.
மேலும், ஜிம்மி டாடாவிடம் சொந்தமாக செல்போன் கூட இல்லையாம். அவர் நவீனத் தொழில்நுட்பத்தை விடப் புத்தகங்களையே அதிகம் நம்புவாராம். செய்தித்தாள்கள் மூலமே நியூஸ்களையும் தெரிந்து கொள்வாராம்.. அமைதியான வாழ்க்கையை விரும்பும் ஜிம்மி டாடா தனது வீட்டை விட்டு வெளியேறுவது அரிது என்று சொல்லப்படுகிறது.
பங்குகள்: ஜிம்மி டாடா என்ன தான் எளிமையாக வாழ்ந்தாலும் அவருக்கு டாடா குழுமத்தில் குறிப்பி தகுந்த அளவுக்குப் பங்குகள் உள்ளன. டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா சன்ஸ், டிசிஎஸ், டாடா பவர், இந்தியன் ஹோட்டல்ஸ் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் என பல டாடா நிறுவனங்களில் ஜிம்மி டாடாவுக்கு பங்குகள் உள்ளது. மேலும், அவர் சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார். 1989இல் அவர்களின் தந்தை நேவல் டாடாவின் மரணத்தைத் தொடர்ந்து ஜிம்மி டாடா இந்த பொறுப்புக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications