அம்பானி வீட்ல இப்படியொரு மேட்டரா? நீடா அம்பானி மேக்கப் போடுறதுக்கு எவ்வளவு செலவாகுது பாருங்க..பார்ரா
மும்பை: அம்பானி வீட்டு நிகழ்வு எதுவானாலும், அது மீடியாவில் பரபரப்பாக மட்டுமல்லாமல் ஆச்சரியமாகவும் பேசப்பட்டுவிடும். இப்போதும் அப்படித்தான் ஒரு விஷயம் இணையத்தில் பரவி, பலருக்கும் திகைப்பை உண்டுபண்ணி வருகிறது.
அம்பானி - நீடாவின் மகன் ஆனந்த், ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.. ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே, ஒவ்வொரு நாளும், அம்பானி வீட்டில் சடங்குகளும், பூஜைகளும் வெகுஅமர்க்களமாக நடந்தன.

சடங்குகள்: இந்த சடங்குகளுக்கு, விஐபிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.. 3 நாட்கள் நீடித்த திருமண விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து பதினான்காயிரம் பேர் கலந்து கொண்டனர்.. இவர்கள் தினந்தோறும் இரவில் நடக்கும் சடங்குகளிலும் பங்கேற்று வந்தனர்..
இந்த சடங்குகள் முதல் திருமண வைபவம் வரை, மணமக்கள் அணிந்திருந்த ஆடைகள், அம்பானியும், அவரது மனைவியும் அணிந்திருந்த ஆடைகள், அணிகலன்கள் எல்லாமே பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. இதில் ஒருமுறை ஆனந்த் அம்பானி முதலை தோலினால் செய்யப்பட்ட ஜாக்கெட் அணிந்திருந்தார். இந்த முதலை ஜாக்கெட் 36 லட்சம் ரூபாயாம்.
பரிசுப்பொருட்கள்: இந்த திருமணத்துக்கு, கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாயை அம்பானி செலவு செய்திருந்தாலும், திருமணத்துக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் அதற்குமேல் கவனம் பெற்றிருந்தது. கார், ஹெலிகாப்டர், ஆடம்பர பங்களா என கோடிக்கணக்கில் மணமக்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. எனினும், இந்த பரிசுபொருட்களில் சில அணிகலன்களும் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக, மணமகள் ராதிகாவுக்கு ரூ.21.7 கோடி மதிப்புள்ள முத்து நகைகள், வைர நகைகளை முகேஷ் தம்பதியினர் வழங்கியிருந்தாலும், பில்கேட்ஸ் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரத்தை தந்திருந்தார். நடிகை கத்ரீனா கைஃப், மற்றும் விக்கி கவுஷல் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியும், அமிதாப் பச்சன் குடும்பத்தினர்கள் ரூ.30 கோடி மதிப்புள்ள மரகத செயினையும் பரிசாக தந்திருந்தனர்..
அந்த அளவுக்கு உடை, அணிகலன்களில் அம்பானி குடும்பத்தினருக்கு நாட்டம் இருப்பதாக தெரிகிறது. அதுவும் இல்லாமல், அம்பானி தம்பதியினர் எப்போதுமே தங்களை அழகாகவும், ஆடை அலங்காரங்களை பொருத்தமாகவும் வைத்திருக்கவே செய்கிறார்கள். நீதா அம்பானி, இப்போது மிகச்சிறந்த தொழிலதிபராகிவிட்டதால், ஸ்டைலிஷ் தோற்றத்துடனேயே வலம்வருகிறார்.. 60 வயதை நீதா அம்பானி தொடப்போகிறார் என்றாலும், எல்லா நேரமும் தன்னை அழகாக வைத்து கொள்வதில் கவனம் செலுத்துவாராம்.
மேக்கப் கலைஞர்: ஆனால், அம்பானி குடும்பத்தினரின் அழகிய தோற்றத்திற்கு முக்கிய காரணமே, மிக்கி கான்ட்ராக்டர் என்ற ஒப்பனைக் கலைஞர்தானாம்.. இவர்தான் அவர்களது "குடும்ப மேக்கப்மேன்"
30 வருடமாக அனுபவமுள்ள மிக்கி, நீதா அம்பானி, இஷா அம்பானி, ஷ்லோக் மேத்தா உள்ளிட்டோருக்கு மேக்கப் செய்துள்ளார்... முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, மகள் இஷா அம்பானி, மருமகள் ஷ்லோக் மேத்தா இவர்களுக்கெல்லாம் மிக்கிதான் மேக்கப் கன்ட்ராக்டராக உள்ளார்.
கட்டணம்: ஏதாவது நிகழ்ச்சிகளில் அம்பானி குடும்பத்தினர் பங்கேற்பதாக இருந்தால், அல்லது ஒரு (சிட்டிங்) அமர்வுக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை கட்டணம் வாங்குகிறாராம் மிக்கி.. அதனால், இவரை இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த மேக்கப் மேன் என்கிறார்கள். அம்பானி குடும்பம் மட்டுமல்லாமல், பாலிவுட் பிரபலங்களால் விரும்பப்படும் மிக முக்கியமான ஒப்பனை கலைஞராக விளங்கி கொண்டிருக்கிறார் மிக்கி.
1992ம் ஆண்டு, நடிகை கஜோலின் முதல் படமான "பெகுடி" படத்தில்தான், மிக்கியும் மேக்கப் மேனாக அறிமுகமாகியிருக்கிறார்.. அப்போதுமுதலே பாலிவுட்டில் பிரபலமாக ஆரம்பித்துவிட்டார் மிக்கி. "ஹம் ஆப்கே ஹை கோன்", "தில் தோ பாகல் ஹை", "குச் குச் ஹோதா ஹை", "கல் ஹோ நா ஹோ," மற்றும் "மை நேம் இஸ் கான்" என வரிசையாக அத்தனை ஹிட் படங்களிலும் மிக்கி பணிபுரிந்திருக்கிறார்.
பிரபலம்: காஜல் தவிர, தீபிகா படுகோன், கரீனா கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா என அனைத்து முன்னணி நடிகைகளின் மேக்கப் கலைஞராகவும் மிக்கி கான்ட்ராக்டர் இருந்து வருகிறார்...
அதிக சம்பளம்: ஆரம்பத்தில், ஒரு சிட்டிங்கிற்கு 1 லட்சம் வாங்கி வந்த மிக்கி கான்ட்ராக்டர், இப்போது ஒரு நாளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வசூலிக்கிறாராம்.. சிலசமயம், மேக்கப் செய்ய 7.5 லட்சம் பெறுகிறாராம.. டோக்கியோ பியூட்டி பார்லரில் சிகையலங்கார நிபுணராக இருந்த மிக்கி, அதற்கு பிறகுதான் பாலிவுட்டில் மேக்கப் மேனாக நுழைந்துள்ளார்.. மும்பையில் ஒப்பனை கலைஞர் ஒருவர் வாங்கும் அதிபட்ச கட்டணம் இதுவாகும்.
நாட்டில் உள்ள பல ஐஏஎஸ் அதிகாரிகளை விட விக்கியின் சம்பளம் பல மடங்கு அதிகம் என்கிறார்கள். அதேசமயம், அம்பானி வீட்டு நிகழ்வுகளுக்கெல்லாம் இவர்தான் மேக்கப் போடுகிறார் என்பதால், நாளுக்கு நாள் இவருக்கான கிரேஸ் பாலிவுட்டில் கூடிவருகிறதாம்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications