ராஜாக்கள் அரண்மனையை மிஞ்சும் அம்பானியின் வீடு.. கரண்ட் பில் மட்டும் இத்தனை லட்சங்களா? அடேங்கப்பா!
மும்பை: மும்பையில் உள்ள ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானியின் வீடு முழுக்க நவீன ஏசி வசதி, அலங்கார விளக்குகள் என அந்த காலத்து ராஜாக்கள் அரண்மனையை மிஞ்சக்கூடிய வகையில் பல வசதிகள் உள்ளதாம். அண்டலியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு மின்சார கட்டணம் மட்டும் எவ்வளவு மாதம் செலுத்துவார்கள் என்பதை நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா? அது பற்றி இங்கு பார்ப்போம்.
உலக பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானி, இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு சொந்தமாக மும்பையில் ரூ.15,000 கோடி மதிப்பில் 27 தளங்களுடன் கூடிய பிரமாண்ட சொகுசு இல்லம் உள்ளது.

60 மாடி கட்டிடத்தின் உயரம்
மும்பையின் பரேட் சாலையில் அமைந்துள்ள இந்த வீடு, அந்த பகுதி வழியாக செல்வோரை வாய் பிளக்க வைக்கும். ஒவ்வொரு தளமும் இரண்டு தளங்களுக்கு நிகரான உயரத்துடன் அமைந்து இருப்பதால் இந்த கட்டிடத்தின் உயரம் 60 மாடி கட்டிடம் எவ்வளவு உயரம் இருக்குமோ அந்த அளவு இருக்கும். உலகின் மிகவும் மதிப்பு மிக்க வீடுகளில் ஒன்றாக இது உள்ளது.
மின் கட்டணம் எவ்வளவு?
நவீன அரண்மனை போல அமைந்து இருக்கும் வீட்டில், பல்வேறு வசதிகள் உள்ளன. தனி மருத்துவமனை, பிரைவேட் தியேட்டர், ஸ்பா, ஸ்நோ ரூம் என சகல வசதிகளும் இந்த வீட்டில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்தில் காணப்படும் குளிருக்கு நிகராக உணரும் வகையில் தனி ஸ்நோ ரூம் இருக்கிறதாம்.
ஹெலிபேடு, 160 கார்களை நிறுத்தி வைக்க கூடிய அளவு பார்க்கிங் வசதியும் உள்ளது. இந்த வீட்டை பராமரிப்பதற்கு மட்டும் 600 பேர் பணியாற்றுகிறார்கள். வீடு முழுக்க நவீன ஏசி வசதி, அலங்கார விளக்குகள் என அந்த காலத்து ராஜாக்கள் அரண்மனையை மிஞ்சக்கூடிய வகையில் பல வசதிகள் உள்ளதாம். அண்டலியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு மின்சார கட்டணம் மட்டும் எவ்வளவு மாதம் செலுத்துவார்கள் என்பதை நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா?
ரூ. 70 லட்சம் கட்டுகிறார்கள்
மின் கட்டணத்தை கேட்டால் ஒரு நிமிடம் தலையே சுற்றி விடும். அட ஆமாங்க. இந்த வீட்டில் மின் கட்டணம் மட்டும் ரூ.70 லட்சம் கட்டுகிறாரர்களாம். இந்த தொகைக்கு புதிய பி எம் டபிள்யூ காரையே விலைக்கு வாங்கிவிடலாம். இவ்வளவு பெரிய பிரமாண்ட வீட்டிற்கு இந்த தொகையெல்லாம் மிக சாதாரணம்தான் என்கிறார்கள் மும்பை வாசிகள்.
வானுயர்ந்த இந்த கட்டிடத்தில், 27 வது தளத்தில் அம்பானி குடும்பத்தினர் வசித்து வருகிறார்களாம். இந்த வீட்டில் இருந்து பார்த்தால் அரபிக்கடலின் அழகை காணும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
செண்டிரைலஸ் ஏசி
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஆண்டிலியா வீடு குறித்த மற்றொரு சுவாரசிய தகவல் இணையத்தில் வைரலானது. அதாவது, முகேஷ் அம்பானியின் வீட்டில் ஒரு இடத்தில் கூட அவுட்டோர் ஏசி யூனிட் இல்லை. தற்போது நடுத்தவர வசதி படைத்த மக்கள் வீடுகளில் கூட அத்தியாவசிய பொருட்களீன் பட்டியலில் ஏசி இடம் பிடிக்கிறது.
அப்படி இருக்க, இவ்வளவு பெரிய பணக்காரர், தனது சொகுசு பங்களாவில் ஏசி இல்லாமலா இருப்பார் என்று நெட்டிசன்கள் மத்தியில் விவாதம் எழுந்தன. ஆனால், இது குறித்து சுவாரசிய தகவல் ஒன்று வெளியானது. வெளிப்புற ஏசி யூனிட்களால் வீட்டின் அழகு கெடும் என்பதால், செண்டிரைலஸ் ஏசி வசதியை பயன்படுத்தப்படுகிறதாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications