பதான் வெற்றி விழாவில்.. கண்களை பறித்த ஷாரூக் கானின் நீல நிற வாட்ச்.. இத்தனை கோடிகளா?
பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் அணிந்திருக்கும் நீல நிற வாட்சின் விலை என்ன தெரியுமா?
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் தனது கையில் அணிந்திருக்கும் நீல நிற வாட்ச்சின் விலை என்ன தெரியுமா, அந்த வாட்ச் எந்த நிறுவனத்தை சேர்ந்தது என்பது குறித்து தெரியுமா?
பாலிவுட் நடிகர் ஷாரூக் கான். இவருக்கு மொழிகள் கடந்து ரசிகர்கள் இல்லாமல் இருக்க மாட்டார்கள். தமிழில் உயிரே படம் மூலம் அறிமுகமானார். இவர் பாலிவுட்டில் கொடி கட்டி பறந்து வருகிறார்.
இவர், தீபகா படுகோன் நடித்த பதான் திரைப்படம் கடந்த மாதம் 23 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் பேஷாரம் ரங் எனும் பாடலில் தீபிகா படுகோன் டூ பீஸ் ஆடை அணிந்து கொண்டு தாராளமாக கவர்ச்சியை காட்டியிருப்பார்.

காவி நிற உடை
அந்த வகையில் அந்த பாடலில் காவி நிற உடை அணிந்து கொண்டு அவர் நடித்த காட்சிகளுக்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில்தான் ஷாரூக் கானை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என பிர்கயா தாகூர் கொதிப்படைந்து பேசினார்.

ஷாரூக்கான்
இன்னும் சிலர் ஷாரூக் கான் தனது மகளுடன் போய் இந்த திரைப்படத்தை பார்ப்பாரா என கேள்வி எழுப்பியிருந்தனர். இதையெல்லாம் தாண்டி ரசிகர்கள் அவரை விரும்புவதற்கு காரணம் 57 வயதிலும் ஸ்டைலாக இருக்கிறார் என்பதால்தான், படங்களில் மட்டும் அல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் ஸ்டைலாகவே இருப்பார்.

பதான் படம்
பதான் படத்திற்கு எத்தனை எதிர்ப்புகள் வந்த போதிலும் அந்த படத்தின் வெற்றி விழா ஒன்றில் ஷாரூக்கான் கலந்து கொண்டார். அவர் கருப்பு நிற கோட் சூட்டில் வநதிருந்தார். இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் அணிந்திருந்த வாட்ச் அனைவர் கண்களையும் பறித்தது. ஏற்கெனவே பதான் பட புரமோஷனுக்காக தீபிகாவுடன் வீடியோ பகிர்ந்த போதும் இதே நீல நிற வாட்ச்சை ஷாரூக் கான் அணிந்திருந்தார்.

4.98 கோடி
அவரிடம் ஏராளமான வாட்ச்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வாட்ச் எந்த நிறுவனத்தினுடையது என தேடிய போது அது Audemars Piguet எனும் காஸ்ட்லி பிராண்ட் என தெரியவந்தது. இந்த நிறுவனத்தின் வாட்ச் ரூ 4.98 கோடியாகும். Chrono24 எனும் இணையதள விவரங்களின்படி இந்த வாட்ச் ரூ 4.7 கோடிக்கு விற்பனையாகிறது.

ஷாரூக்கானின் வாட்ச்
ஷாரூக்கானின் வாட்ச் இப்போதுதான் முதல்முறையாக கவனத்தை ஈர்க்கவில்லை. ஏற்கெனவே ஒரு செய்தியாளர்கள் சந்திப்பின்போது அனுஷ்கா சர்மா கூறுகையில், ஷாரூக்கானிடம் இருந்து எதையாவது திருட வேண்டும் என நினைத்தால் அது அவருடைய வாட்ச்களாகத்தான் இருக்கும் என கூறியிருந்தார். அது போல் ஷாரூக்கானின் மும்பை வீடு ரூ 200 கோடி மதிப்பிலானது. இது கடற்கரையை பார்த்த மாதிரியான வீடு. இந்த வீட்டிற்கு மன்னட் என்ற பெயர்.

சொகுசு பங்களா
ஷாரூக்கானுக்கு மும்பை மட்டும் இல்லாமல் டெல்லியிலும் சொகுசு வீடு உள்ளது. அவருக்கு பிஎம்டபிள் 6, பிஎம்டபிள் 7, ஆடி உள்ளிட்ட கார்கள் உள்ளன. வீடு, கார் எல்லாம் கூட ஓகே, ஆனால் வாட்சுக்கு இத்தனை கோடி செலவா என பதான் பட நடிகரின் ரசிகர்க் வாயை பிளந்து பார்க்கிறார்கள். அட்லி இயக்கும் ஜவான் படத்திலும் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் டன்கி படத்திலும் ஷாரூக் கான் நடித்துள்ளார். ஆடிமர்ஸ் பிக்யூட் நிறுவனத்தின் வாட்ச்களில் உயர் தர பொருட்களை கொண்டு உருவாக்குவார்கள். அது போல் டெக்னாலஜியும் நவீனமாக இருக்குமாம். ரோலக்ஸ் வாட்ச்சை விட சிறந்த வாட்ச் என்கிறார்கள். இந்த நிறுவனம் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்தது. இவர்கள் வாட்ச் , சுவர் கடிகாரங்களை தயாரிக்கிறார்கள். வாட்ச்சில் AP எனும் முத்திரை இருக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications